இராஜகிரியில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு மீலாது விழா பேரணி.

1 Min Read
  • இராஜகிரியில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு மீலாது விழா பேரணி.

நபிகளாரின் புகழ் பாடி முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்ற, 100-க்கணக்கான இஸ்லாமியர்கள்..

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இராஜகிரியில் மீலாது நபி பெருவிழா பேரணி நடைபெற்றது. 9-வது ஆண்டாக மஸ்ஜிதுத் தக்வா ஹனபி பள்ளிவாசல் நிர்வாகசபை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஏராளமான இஸ்லாமியர்களும், சிறுவர்களும் நபிகளாரின் புகழ் பாடியவாறு இராஜகிரியின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம்கள், பிலால்கள், தலைவர்கள், செயலாளர்கள், கமிட்டி உறுப்பினர்கள், அல் கதீஜா அரபி பள்ளி மற்றும் அதாய் அரபி பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஊர் ஜமாத்தார்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 100-க்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

 

பாரம்பரிய சன்னி மற்றும் சீயா இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன்நபி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். கடந்த இரண்டரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் தோற்றம் பெற்ற ஸலபி மற்றும் தேவ்பந்தி பிரிவுகளின் அறிஞர்கள் இதனை நிராகரிக்கின்றனர். முஸ்லிம் உலகின் பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்கள் மீலாதுன் நபி கொண்டாட்டத்து ஆதரவு தெரிவிக்கின்றனர். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவது அவசியமானது என்றுஅவர்கள் கருதுகின்றதுடன், அது போற்றத்தக்க நிகழ்வு என்ற ரீதியில் நோக்குகின்றனர். எனினும் ஸலபிகள் அல்லது வஹாபிகள் எனும் பிரிவினர் மீலாதுன் நபி கொண்டாட்டத்தை அது நபிகளாரின் வழிமுறைக்கு மாறானது என எதிர்க்கின்றனர்.

இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதமான ரபி-அல்-அவ்வலில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சியா முஸ்லிம்கள் தங்கள் ஆறாவது இமாம் ஜாஃபர் அல்-சாதிக்கின் பிறந்தநாளும் முகமது நபிகளின் பிறந்தநாளும் ஒன்றாக வருவதாக மாதத்தின் 17வது நாளில் கொண்டாடுகின்றனர். சன்னி முஸ்லிம்கள் இதனை மாதத்தின் பன்னிரண்டாம் நாள் கொண்டாடுகின்றனர். இசுலாமிய நாட்காட்டி ஓர் சந்திர நாட்காட்டியாதலால், கிரெகொரியின் நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும்.

 

Share This Article
Leave a review