திருமணமான புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு

2 Min Read
மார்த்தாள் மேரி

திருமணம் ஆன மூன்றே மாதத்தில் புதுப்பெண் கனவர் வீட்டில் மர்மமான முறையில் உயிர் இழந்ததை அடுத்து பெண்ணின் உறவினர்கள் கணவனை கைது செய்ய வலியுறுத்தி தஞ்சையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சை மாவட்டம் மேலத்திருப்பந்துருத்தி அற்புத மாதா கோவில் தெருவில் வசித்து வரும் 35 வயதான விவேக என்பவருக்கும், தஞ்சை சருக்கை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த 29 வயதான மார்த்தாள் மேரி என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி திருமணம் நடந்தது திருமணம் முடிந்து மூன்றாவது அழைப்பிற்கு மார்த்தால் மேரியை அவரது குடும்பத்தினர் அழைத்து வந்தனர் அதன் பிறகு மார்த்தாள் மேரி கணவன் வீட்டுக்கு செல்லாமல் பெற்றோர் வீட்டிலேயே இருந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி இரண்டு வீட்டு குடும்பத்தினரும் கூடி பேசி மார்த்தால் மேரியை அவரது கணவர் வீட்டில் விட்டு விட்டு வந்துள்ளனர்.

மார்த்தாள் மேரி கனவருடன்

இந்த நிலையில் இன்று 24ம் தேதி காலை மார்த்தால் மேரிக்கு வலிப்பு வந்ததாக கூறி திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கணவர் விவேக் மார்த்தால் மேரி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் சற்று நேரத்தில் உங்கள் மகள் இறந்து விட்டதாக கூறியதால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த மார்த்தாள் மேரி குடும்பத்தினர்கள் தங்கள் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி நடுக்காவேரி காவல் நிலையத்தில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் எட்டு பேர் மீது புகார் அளித்தனர்.

இதனிடையே பெண்ணின்உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தங்கள் மகள் உடம்பில் காயங்கள் இருப்பதாக கூறி கணவனை கணவனையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருமண அழைப்பு

திருமணம் நடந்து மூன்று மாதங்கள் ஆனதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டாட்சியர் இலக்கியா, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதா உள்ளிட்ட காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நடுக்காவேரி காவல்துறையினர் மார்த்தாள் மேரி கணவன் விவேக் மற்றும் அவர் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருமணமான மூன்றே மாதத்தில் இளம் பெண் கணவன் வீட்டில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review