இறந்த தாசில்தாருக்கு ஹோமம் செய்து பதவியேற்ற தாசில்தார் அலெக்சாண்டர் .

2 Min Read
ஹோமம்

ஏற்கனவே பணியிலிருந்த தாசில்தார் விபத்தில் இறந்ததால் சற்று அச்சத்திலிருந்த திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் . புதிய தாசில்தார் பொறுப்பேற்கும்போது கணபதி ஹோமம் புரிந்து திருஷ்டி மற்றும் தீட்டை கழித்துள்ளனர் .

- Advertisement -
Ad imageAd image

கடலூர் மாவட்டம் பண்ருட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன் (வயது 54). திண்டிவனத்தில் தாசில்தாரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூங்கோதை (48). இவர்களது மகன் சிவசங்கரன். இவர்கள் 3 பேரும் காரில் இந்த மாதம் 6 ஆம் தேதி காலை காஞ்சிபுரம் கோவிலுக்கு சென்றனர். காரை சிவசங்கரன் ஓட்டி சென்றார். தரிசனம் முடித்து விட்டு ஊருக்கு திரும்பினார். இரவு 10 மணி அளவில் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் செய்யாறு அடுத்த நெடுங்கல் கூட்ரோடு வந்து கொண்டிருந்தனர். அப்போது மேல்மருவத்தூரில் இருந்து பால் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.

நெடுங்கல் கூட்ரோடு அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த வெங்கட சுப்பிரமணியின் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பூங்கோதை, சிவசங்கரன் படுகாயம் அடைந்தனர்.

வெங்கட சுப்பிரமணியன் மறைவை ஒட்டி மேல்மலையனுார் தாசில்தார் அலெக்சாண்டர் திண்டிவனம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இவர் 18ம் தேதி ஜக்காம்பேட்டை சப் கலெக்டர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். தாசில்தார் அலெக்சாண்டர் சுமார் 6:00 மணி அளவில்  அவரது அறையில் கணபதி ஹோமம்  சிறப்பு யாகம்  செய்த பின்னர் . மேலும் அவரது வாகனத்திற்கு  மாலை அணிவித்து, மற்றும் பூசணிக்காய்  உடைத்தனர். அதன் பின்னர் தாசில்தார் அவர்கள் பணிகளைத் தொடர்ந்தார்.

இது தொடர்பாக திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களிடம் விசாரித்தபொழுது , ‘பழைய தாசில்தார் விபத்தில் இறந்ததால் இங்கு பனி மாறுதலுக்கு வர பலர் தயக்கம் காட்டினார் , எனவே  அந்த அறையில் திருஷ்டி கழிக்கவும் புதிய தாசில்தாரின் மன திருப்திக்காகவும், பூஜைகள் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

எனினும் விழுப்புரம் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் , இந்த குற்றச்சாட்டினை மறுத்தனர் , இது அணைத்து துறைகளிலும் , புதியதாக பொறுப்பேற்கும் போது அந்த அந்த அலுவலக ஊழியர்களின் திருப்திக்காக செய்யப்படுவது தான் . தாசில்தார் சுப்பிரமணியன் இறப்பால் அசம்பாவிதம் ஏற்படும் என்பது போன்ற அச்சம் யாருக்கும் இல்லை என்று பதில் அளித்தனர் .

Share This Article
Leave a review