பிறந்த சில மணி நேரமேயான ஆண் குழந்தை , குப்பைத்தொட்டியில் வீச்சு .

0
120

செஞ்சி அருகே குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தையை வீசிச் சென்றவரை காவல்துறை தேடி வருகிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த முட்டத்தூர் கிராம பேருந்து நிறுத்தம் அருகே உள்ள குப்பைத்தொட்டியிலிருந்து நேற்று காலை குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதைக்கேட்ட அங்குப் பேருந்துக்காகக் காத்திருந்த பொதுமக்கள் குப்பைத்தொட்டியில் பார்த்தபோது, அதில் பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்ததும், அந்த குழந்தையை யாரோ? குப்பைத்தொட்டியில் வீசிச் சென்றிருப்பதும் தெரியவந்தது .

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டம்பட்டு அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் அந்த குழந்தை, விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் காவல்துறை வழக்குப்பதிந்து, பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தையைக் குப்பைத்தொட்டியில் வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த பெற்றோர் யார்?, கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை வீசிச்சென்றாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here