இரு தரப்பிற்கும் இடையே மோதல். இஸ்லாமிய இளைஞர்களை மாட்டிவிட போலி புகார் !

3 Min Read
ஷானு மற்றும் இம்ரான்

லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது, பசுவதை செய்ததாக 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனிடையே அதில் விசாரணையில் பல திருப்பங்கள் அரங்கேறியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் ராம நவமி கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க மிகச் சிறப்பான முறையில் இந்த ராமநவமி கொண்டாடப்பட்டது. அதேநேரம் பல இடங்களில் ராமநவமி போது வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின.

குறிப்பாக உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்டங்களைத் தொடர்ந்து மோசமான வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனிடையே உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவில் ராமநவமி அன்று சிலர் பசுவைக் கொன்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நான்கு இஸ்லாமிய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இதில் மிகப் பெரிய ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது. ராம நவமி (மார்ச் 30) ​​அன்று ஆக்ராவில் பசு வதை செய்யப்பட்டதாகத் தரப்பட்ட இந்த புகார் போலியானது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அங்குள்ள அகில பாரத இந்து மகாசபை உறுப்பினர் வேண்டுமென்றே நான்கு முஸ்லீம் இளைஞர்களைச் சிக்க வைக்க இந்த காரியத்தில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.

நான்கு அப்பாவி இளைஞர்களை மாட்டிவிட இந்த காரியத்தில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மார்ச் 30ஆம் தேதி மகாசபை நிர்வாகி ஜிதேந்திர குஷ்வாஹா என்பவர் ராம நவமி பண்டிகையின் போது பசுவதை நடந்ததாகக் கூறி நான்கு முஸ்லிம் இளைஞர்கள் மீது ஆக்ரா போலீசாரிடம் புகார் அளித்தார்.

இது குறித்து தனக்குத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் இருப்பினும், அதற்குள் குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்தார்.
அதேநேரம் ஆதாரமாக அங்கிருந்து மாட்டிறைச்சியைக் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராமநவமி போது பதற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காக போலீசார் அந்த இஸ்லாமிய இளைஞர்களை முதலில் கைது செய்துவிட்டனர். இருப்பினும், விசாரணையில் போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது.

அதாவது பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்கள் குறிப்பிட்ட நாளில் அந்த இடத்தில் இல்லை என்பது அங்கிருந்த சிசிடிவி வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.
மாறாகப் புகார் அளித்த மகாசபை உறுப்பினர்களில் சிலரது மொபைல் ஜிபிஎஸ் மற்றும் கால் ரெக்கார்டுகளை ஆய்வு செய்த போது, அவர்கள் தான் அந்த இடத்தில் நீண்ட நேரமாக இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

உண்மையில் என்ன நடந்தது என்றால், இரு தரப்பிற்கும் இடையே மோதல் இருந்த நிலையில், இஸ்லாமிய இளைஞர்கள் மாட்டிவிட இப்படியொரு போலி புகாரைக் கொடுத்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பதற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்த ராம நவமி அன்று, அவர்கள் இந்த புகாரை கொடுத்ததாகவும் உபி போலீஸ் கூடுதல் கமிஷ்னர் ஆர்கே சிங் தெரிவித்தார்.

அதாவது ராம நவமி போது, இந்து மகாசபை உறுப்பினர்களே ராம நவமி போது பசுவைக் கொன்றுள்ளனர். அதைத்தான் இஸ்லாமிய இளைஞர்கள் செய்ததை போலப் புகார் அளித்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ஏழு பேரைத் தேடி வருகின்றனர். இதில் அவர்கள் பயன்படுத்திய கத்தியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். குற்றவாளிகள் யார்: ஷானு, இம்ரான், நான்கு ஏபிஎச்எம் உறுப்பினர்கள் உட்பட 7 பேர் இணைந்து இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். ஷானு மற்றும் இம்ரான் இருவர் மீது கடந்த காலங்களில் ஏகப்பட்ட குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த இருவரும்தான் ஏபிஎச்எம் தலைவர்களுடன் கூட்டு சேர்ந்து நான்கு முஸ்லிம் இளைஞர்கள் எதிராகப் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளனர். முன்பு பசுவை கொன்றதாக கைதான முஸ்லீம் இளைஞர்களில் ஒருவரான நக்கீம் வேறு ஒரு விவகாரத்தில் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஷானு மற்றும் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருந்த ஷானு மற்றும் இம்ரான் ஆகிய இருவரும் முஸ்லீம் இளைஞர்களை மாட்டிவிட இந்த செயலை செய்துள்ளனர்.

Share This Article
Leave a review