நீலகிரி மாவட்டத்தில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் கடந்த ஆண்டு புதிய தொழில்நுட்பபமான மண் ஆணி பொருத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு நிலையில் அப்பகுதியில் கடந்த காலங்களில் மண்சரிவு ஏற்படாததால், மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்க் கொள்ளப்படும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் கடந்த 23 ம் தேதி இரவு கொட்டிக் தீர்த்த வரலாறு காணாத மழையால், கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில் 37 செமீ மழை ஒரே இரவில் பதிவானது.இதனால் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் எட்டு இடங்களில் மண்சரிவு மற்றும் குஞ்சப்பனை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில்,மாநில நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி கொட்டும் மழையில் ஒன்பது மணி நேரம் பணியாற்றி சாலையில் ஏற்ப்பட்ட மண்சரிவை அகற்றி தடையில்லா போக்குவரத்தை துவக்கினர்.

இந்நிலையில் மண்சரிவு ஏற்ப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்ட பணிகளை ஆய்வு மேற்க் கொள்வதற்க்காக மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்ப்பட்ட குஞ்சப்பனை பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டனர்.ஆய்வு மேற்க் கொண்ட அமைச்சர்கள் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில் தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்த போது நீலகிரி மாவட்டத்திலும் அதே அளவு மழை பெய்தது.குறிப்பாக கோத்தகிரி மலைப்பாதையில் கடந்த 23 ம் தேதி வரலாறு காணாத அளவுக்கு 37 செமீ மழை பெய்ததால், எட்டு இடங்களில் மண்சரிவு ஏற்ப்பட்டது.

கடந்த காலங்களில் மழையால் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்ப்பட்ட போது இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில்,கடந்த 23 அன்று மலைப்பாதையில் மண்சரிவு ஏற்ப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் ஒன்பது மணி நேரத்திற்குள் சாலை போக்குவரத்து சரிசெய்ப்பட்டு போக்குவரத்து துவங்கப்பட்டது.எதிர் காலத்தில் மண்சரிவு ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பமான மண் ஆணி பொருத்துதல் திட்டத்தை பயன்படுத்தி,மண் சரிவு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் மண்வள ஆய்வு மையத்தின் நிபுணர்களோடு இணைந்து மண்சரிவு ஏற்படுவதை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்ப்பட்ட பகுதியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் நெடுஞ்சாலை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இதனிடையே நாளை நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்க பணிகளையும்,மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளையும் ஆய்வு மேற்க் கொள்ள உள்ளார்.