புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திமுக எம்.பி.-க்கள் என்னை சந்தித்தபோது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருந்துவிட்டு மீண்டும் அரசியல் செய்கிறார்கள் என்றும் நாகரீகமற்றவர்கள் என்றும் விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.-கள் எதிர்ப்பு முழக்கமிட்டு கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும்! தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா? தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் மோடி இதனை ஏற்கிறாரா?என்ற கேல்வியை தமிழக எம்பிகள் எழுப்புகிறார்கள்.
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம்! உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல!! நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது. தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா முடியாதா என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்”இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறூ போராட்டங்கள் நடந்து வருகின்றது இன்நிலையில் விழுப்புரத்தில் தமிழக MP களை அவதூறாக பேசியதாக கூறி விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, உருவ பொம்மையை எரித்து போராட்டம்

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்குவது தொடர்பாக திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தமிழ்நாடு எம்பிக்கள் அநாகரிகமாணவர்கள் என்று பேசியதாக கூறி மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதாணை கண்டித்து விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் காந்தி சிலை அருகில் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்தும், உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், அவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்
Leave a Reply
You must be logged in to post a comment.