TVK தலைவர் விஜயை சீரிய சீமான்… முன்னுக்கு பின் முரணாக பேசிய சீமானை கிண்டல் செய்த நெட்டிசன்கள்..

3 Min Read
  • விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும்.. ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி.. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் என்று முன்பு பேசிய சீமான், நேற்று விஜயை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது வேலுநாச்சியாரை குறிப்பிட்டும் விஜய்யை விமர்சித்து பேசினார். இந்த நிலையில், வேலு நாச்சியார் வரலாறை சீமான் தவறாக பேசினார் எனவும், சீமான் கூறியது ஜான்சி ராணி லட்சுமி பாய் வரலாறு எனவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயயை மிக கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -
Ad imageAd image

 

விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டி விஜய், கொள்கைகள், பயணிக்க போகும் அரசியல் பாதைகள் குறித்து பேசினார். மாநாட்டில் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவது இல்லை எனவும் திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள் என்பது தான் நம்முடைய கருத்து என்றும் கூறினார்.

அதுமட்டும் இன்றி தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக, வேலு நாச்சியார், அஞ்சலம்மையாள், பெரியார், காமராஜர் ஆகியோரை அறிவித்தார். மேலும் சும்மா வாய் சவிடால் விட்டு பேசுபவர்கள் போல் நான் இல்லை.. பத்தோடு பதினொன்றாக அரசியல் செய்ய வரலை என்றும் மறைமுகமாக சீமானை தாக்கி விஜய் பேசினார். விஜய் மாநாட்டில் பேசிய உரை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு போருளாகியுள்ளது.

இந்த நிலையில் தான், தவெக விஜய்யை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மிகக் கடுமையாக விமர்சித்து பேசினார். விஜய் மாநாட்டிற்கு முன்பு வரை, விஜய்யின் கொள்கை ஆயிரம் இருக்கட்டும்… அவர் கொடி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆயிரம் இருந்தாலும் அவர் என் தம்பி. என்னை எதிர்த்தே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன்” எனக் கூறினார்.

ஆனால், நேற்றைய மாநாட்டி விஜய்யை கடுமையாக விமர்சித்தார் சீமான். தவெக மாநாட்டில் வைத்த கட் அவுட்டில் இருக்கும் படமே, நான் வரைந்தது எனவும், நான் அரசியலுக்கு வந்த பிறகுதான் சேர, சோழ, பாண்டியன், அழகு முத்துக்கோன் உள்ளிட்டோரை மக்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

மேலும் வேலுநாச்சியாரின் கட் அவுட் வைத்த விஜய்க்கு அவரது வரலாறு தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினார் சீமான். மேலும் பேசிய சீமான், யார் வேலு நாச்சியார் தெரியுமா? கணவர் உடல் மீது சத்தியம் செய்து கைக்குழந்தையை தோளில் உப்பு மூட்டை போல கட்டிக்கொண்டு இழந்த நிலத்தை நான் மீட்டே தீருவேன் என்று உறுதி எடுத்து சென்று வென்று முடித்த வரலாறு தான் தமிழின வரலாறு..” என்று கூறினார். ஆனால், சீமான் கூறிய வேலு நாச்சியர் வரலாறு தவறு என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வேலு நாச்சியார் வரலாறு என்று ஜான்சி ராணி வரலாற்றை சீமான் தவறாக கூறிவிட்டதாகவும் வேலு நாச்சியார் தனது கணவர் இறந்து எட்டு ஆண்டுகள் கழித்துதான் வெள்ளையர்களிடம் போர் புரிந்தார் என்றும் கூறுகின்றனர். ஹைதர் அலியின் படை துணையுடன் வெள்ளையர்களுக்கு எதிராக போரிட்டு, தனது தளபதி குயிலின் உயிர் தியாகத்தால் தனது சமஸ்தானத்தை வென்றார் என்பதே வரலறு எனவும் சொல்கிறார்கள். இது தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தவெகவினர் அதிகம் பதிவிட்டு வருகிறார்கள்.

 

Share This Article
Leave a review