தனது மூன்றாவது ஆட்சி காலத்தின்போது இந்திய நாடு எப்பொழுதும் காணாத வளர்ச்சியை அடையும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார் .
புதன்கிழமை அன்று டெல்லியில் புதியதாக புதுப்பிக்கப்பட்ட பிரகதி மைதானத்தின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி , இந்திய நாடு “கிழக்கிலிருந்து மேற்குவரைக்கும் , வடக்கிலிருந்து தெற்குவரைக்கும் இதன் உள்கட்டமைப்பு பெரிதும் வளர்ச்சி அடைந்து வருகிறது .
பாஜக ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் உலகின் மிக உயரமான ரயில் பாலம், மிக நீளமான சுரங்கப்பாதை , மிக உயரமான மோட்டார் சாலை, மிகப்பெரிய அரங்கம், மிகப்பெரிய சிலை என பல வளர்ச்சிகளை இந்த தேசம் கண்டுள்ளது .
2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு பொருளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. எங்களது இரண்டாவது பதவிக்காலத்தில், இந்திய நாடு பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தை பிடித்தது .
வரும் 2024 மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்” .
“எனது தலைமையிலான பாஜக மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா பொருளாதாரத்தில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இருக்கும் இது மோடியின் உத்தரவாதம்.” என்று அவர் தெரிவித்துள்ளார் .
பிரதமர் மோடி கடந்த ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியின் வளர்ச்சியை சுதந்திரத்திற்குப் பிறகு 60 ஆண்டுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் .
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் 20,000 கிமீ தூர ரயில் பாதைகளை மட்டுமே மின்மயமாக்க முடிந்தது அனால் கடந்த கடந்த ஒன்பது ஆண்டுகளில் பாஜக அரசாங்கம் 40,000 கிமீ ரயில் பாதைகளை மின்மயமாக்கியுள்ளது .
2014 ஆம் ஆண்டில், டெல்லி விமான நிலையத்தின் வருமானம் ஆண்டுக்கு 5 கோடியாக இருந்தது. இப்போது 7.5 கோடியாக இது உயர்ந்துள்ளது . நாட்டின் ஒட்டுமொத்த விமான நிலையங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது .
பாரத மண்டபம் போன்ற மையங்கள் ஒரு நாட்டின் சுயவிவரத்தை மேம்படுத்தும் அதே வேளையில், “எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்” அதைத் தடுக்க முயன்றனர் , நான் உறுதியாக சொல்கிறேன் எதிர் கட்சி என்ற போர்வையில் நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் இவர்கள் இந்த பாரத மண்டபத்திற்கு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக வருவார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.