ரங்கசாமி மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்ய நாராயணசாமி வலியுறுத்தல்.

2 Min Read
நாராயணசாமி

கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரி அரசு அமைச்சரவையில் இருந்து பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்தார்.அதற்க்கு அவர் சில காரனங்களை சொல்லியிருந்தார்.அவரது ராஜினாமா பெண்கள் மத்தியில் குறிப்பாக தலித் பெண்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது இப்போது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார் குறித்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார்.

பெண் அமைச்சர்

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:

மாநில அந்தஸ்து விவகாரத்தில் எதிர்கட்சிகள் மீது முதல்வர் ரங்கசாமி பொய்யான குற்றச்சாட்டை தெரிவித்து வருகிறார் என்றும்,சந்திர பிரியங்காவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், திருமுருகனை அமைச்சராக்க வேண்டும் என 4 நாட்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநரை சந்தித்து முதல்வர் கடிதம் கொடுத்துள்ளார், அதை கேள்விப்பட்டு தான் சந்திர பிரியங்கா தாமாக முன்வந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என கூறினார்.

அடுத்து காங்கிரஸ் ஆட்சி வந்தால் ரைடு நடத்தி விடுவார்கள் என்பதால் துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று கள்ளப்பனத்தை பதுக்கி வைக்கும் வேலையை அமைச்சர் ஒருவர் செய்து வருகிறார் என்றும்முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டியது முதல்வர் மற்றும் அமைச்சர்களை தான் ஏன் என்றால் அவர்கள் செயல்படவே இல்லை என குற்றம் சாட்டினார்.

முன்னாள் முதல்வர்

சந்திர பிரியங்கா ராஜினாமா செய்த விவகாரத்தில் முதல்வர் ஏன் வாய் மூடி மவுனமாக உள்ளார் என கேள்வி எழுப்பிய நாராயணசாமி, பெண் உரிமை குறித்து வாய் கிழிய பேசும் துணைநிலை ஆளுநர் பொட்டிப்பாம்பாக தற்போது உள்ளார் என்றார்.

மேலும்,தலித் பெண் அமைச்சர் புகார் கூறிய நிலையில் முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தின் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.இந்த பிரச்சனை இப்போது கவனம் பெற்று வருகிறது.

புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: “என்னைச் சுற்றி பின்னப்பட்டுள்ள வலையில் சிக்கியுள்ள நிலையில் நான் இக்கடிதத்தினை எழுதுகிறேன்.

சந்திர பிரியங்கா

ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக மாநில அமைச்சராக என் பணியினை மனத் திருப்தியுடனும் மக்களின் ஆதரவுடனும் இந்த நிமிடம் வரை ஓயாமல் செய்து வருகிறேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து பெண்கள் அரசியலுக்கு வந்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என பொதுவாக கூறுவார்கள். ஆனால் கடின உழைப்பும், மன தைரியமும் இருந்தால் இதைப் பற்றி கவலைப்படாமல் களத்தில் நீந்தலாம் என்பதற்கான பல முன்னுதாரணங்கள் வரலாற்றில் உள்ளதைப் பார்த்து களமிறங்கி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மக்களுக்காக இரவு பகலென ஓடி ஓடி உழைத்து வருகிறேன். மக்கள் செல்வாக்கு மூலம் மன்றம் நுழைந்தாலும் சூழ்ச்சி அரசியலிலும், பணம் என்ற பெரிய பூதத்தின் முன்னும் போராடுவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.அவர் குறிப்பிட்டுள்ள அந்த செய்தி தான் நாராயணசாமியில் இந்த பேச்சுக்கு காரணமாகி உள்ளது.

Share This Article
Leave a review