இன்சூரன்ஸ் இல்லாத AUDI A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
தென்சென்னை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகனான ஜெயவர்த்தன், திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தர ராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்செல்வி ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்தவகையில் தென் சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர், இன்சூரன்ஸ் இல்லாத AUDI A4 சொகுசு காரில் ஊர்வலமாக சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் காருக்கான இன்சூரன்ஸ் கடந்த வருடம் செப்டம்பர் மாதமே முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதி வேட்பாளர்களையும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.