நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திரையரங்குகளில் நான்கு காட்சிகள் அனுமதிக்கப்படும்-சீமான்

1 Min Read
சீமான்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர்
சார்பில்
சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது
இதில் அக்கட்சியின்
மாநில  ஒருங்கிணைப்பாளர்
சீமான் கலந்து கொண்டு
கொட்டும் மழையில் நனைந்தபடி பேசியபோது
கிராமங்களில் தான் பண்பாடு கலாச்சாரம் காக்கப்படுகிறது என்றும்  பெண் கொடுக்க மணமகனின் தரத்தை ஆராய்ந்து பார்ப்பதாவும்  குடித்துவிட்டு காரை ஓட்டுவது குற்றம் என்று தெரிந்த அரசே சாராயம் விற்பது ஏன் என்றும்
ஆயிரம் ரூபாய் அரசு வழங்கும் உதவித்தொகையை வயதான பெண்கள் எப்படி பெறுவார்கள் என்பதை மீம்ஸ் கிரியேட்டர்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டுவதை நகைச்சுவையாக பேசிய சீமான்.  

- Advertisement -
Ad imageAd image
கொட்டும் மழையில்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் பாலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு மாற்றுவேன் என்றும்,
திராவிட மாடல் ஆட்சி
இது ஒரு விடியா  ஆட்சி என்றும் நல்லாட்சி தருவது போன்று நடிக்கிறார்கள், என்று குற்றம் சாட்டிய அவர்  கல்வி மருத்துவம் ஆகியவற்றை பொது மக்களுக்கு இலவசமாக தனது ஆட்சியில் வழங்குவதாகவும்.

நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள்  என்று தெரிவித்த அவர். தான் ஆட்சிக்கு வந்தால் சாராயம் மதுவை ஒழித்து தென்னை மரம் மற்றும் பனைமர மூலிகை பானம் விற்கப்படும் என்றும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் திரையரங்குகளில் நான்கு காட்சிகள் அனுமதிக்கப்படும் என்றும் மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும்  தெரிவித்தார் அவர்,

தமிழின விடுதலைக்காக தன்னுடைய குடும்பத்தையே தியாகம் செய்த தலைவர்   பிரபாகரன் என்றும் இன படுகொலைக்கு காரணமான ஆட்சி இருக்கக் கூடாது என்றும் அதனை  தூக்கி எறிய வேண்டும் என்றும் சீமான்கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அனல் பறக்க பேசினார்.

Share This Article
Leave a review