சமீபத்தில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பலத்த பாதுகாப்புடன் இருக்கும் ஆளுநர் மாளிகையில் இந்த சம்பவம் நடந்தது என்று ஆச்சரியப்படுகின்றனர் பொது மக்கள்.
போலீசார் விசாரணை திடீரென பெட்ரோல் குண்டு வீசி விட்டு ஒருவர் தப்பி ஓடிய சம்பவம்,யார் செய்ய முடியும் இந்த செயலை.ஆளுநர் மாளிகை அருகே அதுவும் பாதுகாப்பு வளையத்தை மீறி ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அவரிடம் பல்வேறு கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

யார் இந்த கருக்கா வினோத் போலிசாருக்கு தெரியாமல் எப்படி இவ்வளவு பெரிய சம்பவத்தில் இவரால் ஈடுபட முடிந்தது. சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேர்ந்தவர் கருக்கா வினோத் பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகிறது.இந்த நிலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நிகழ்ந்து விசாரணை முழுமையாக நடந்து முடிவதற்குள்,சென்னை தியாகராயர் நகர் செவாவியார் சிவாஜி கணேசன் சாலையில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர் அலுவலகத்தின் வளாகத்தில் முன்பக்க வாயிலில் 6 க்கும் மேற்பட்ட பீர் பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாம்பலம் காவல் துறையினர் முதற்கட்டமாக அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பாட்டில்கள் மற்றும் கற்களை வீசி சென்ற நபர்களை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி சி டி வி காட்சிகளின் அடிப்படையில் போலிஸார் பாட்டில் வீசி சென்றவர்களை தேடி வருகின்றனர்.தமிழகத்தில் பாட்டில் வீசுகிற கலாச்சாரம் துவங்கியுள்ளது.இது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்கின்றனர் அரசியல் ஆர்வளர்கள்.