கல்லு வழி கிராமத்தில் ஐந்து நபர்களை அறிவாளால் வெட்டிய மர்ம நபர்கள். ஐந்து நபர்களை மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. போலீசார் விசாரணை.
சிவகங்கை மாவட்டம், அடுத்த காளையார்கோவில் அருகே உள்ள கல்லுவழி கிராமத்தில் வசித்து வந்த சின்னப்பன் வயது (67) இவர் மரவியாபாரம் மற்றும் , விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் விவசாய சங்க பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி உபகாரமேரி வயது (62) இவரது மகன் ஜேக்கப் பாரி கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் (சவுதி) பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜேக்கப் பாரியின் மனைவி அரசி. இவர்களின் குழந்தை ஜெர்லின் வயது (12) மற்றும் ஜோபின் வயது (7) ஆகியோர் ஜேக்கப் பாரியின் வீட்டில் மாமனார் மாமியார் உடன் வசித்து வந்த நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடு புகுந்து சரமாரியாக 5 பேர்களை நள்ளிரவில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் ரத்த வெள்ளத்தில் சில மணி நேரமாக 5 பேரும் சுயநினைவினை இழந்து கிடந்துள்ளனர். அப்போது சில மணி நேரம் கழித்து ஜோபின் என்ற சிறுவனுக்கு நினைவு வந்து, அக்கம் பக்கத்தில் உள்ளவருகளுக்கு அலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலின் அடிப்படையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் 5 பேர்களையும் மீட்டு சிகிச்சைக்காக காளையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அப்போது சின்னப்பன் இவருடைய மனைவி உபகாரமேரி மற்றும் அரசி அவரது குழந்தைகள் ஜெர்லின் ஜோபின் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முகாமிட்டு 5 தனிபடை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இந்த சம்பத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.