மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: சிறையிலிருக்கும் குற்றவாளிகளை காவலில் எடுக்க போலீசார் மனு

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பொருளாதார குற்றப் பிரிவினர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களை பண மோசடி புகாரை தொடர்ந்து  தேவநாதன் யாதவ் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் (சென்ற ஞாயிற்றுக்கிழமை) சோதனை மேற்கொண்டனர்.

தேவநாதன் யாதவ்

இதற்கிடையே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் சுமார் ரூ.525 கோடியை திரும்ப கொடுக்க மறுப்பதாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு வட்டித் தொகையும், முதிர்வுத் தொகையும் வரவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், 150-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கிய காசோலை வாங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியதால் சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவன அலுவலகத்தில் அவ்வப்போது திரண்டு முறையிட்டு வந்தனர்.

இந்நிலையில், பாதிப்புக்குள்ளான 144 முதலீட்டாளர்கள் தங்களிடம் ரூ.24.5 கோடி பணத்தை பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை அசோக் நகரில் உள்ள தமிழக காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தனர். அதன்படி அப்பிரிவு போலீஸார் கடந்த 12ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து நிதி மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவினர் சென்ற வார ஞிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இவர்கள் மூன்று பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என பொருளாதார குற்றப்பிரிவினர், சென்னை நிதிநிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதில் இந்த வழக்கில் இன்னும் தொடர்புகள் குறித்தும் யார் யாருக்கு நிதி சென்றுள்ளது எங்கு முதலீடு செய்யபட்டுள்ளது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது என தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/aiadmk-party-will-disappear-after-2026-elections-says-ammk-leader-ttv-dhinakaran-at-thanjavur/

இதற்கிடையில், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review