மயிலம் முருகன் கோயில் தேரோட்டம். திரளான பக்தர்கள் பங்க …

1 Min Read
மயிலம் முருகன்

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக கொண்டபடும் அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு மயிலம் முருகன் கோயிலில் கடந்த மார்ச் 27 ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.மயிலம் முருகன்  கோவிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த தேரோட்டத்தில் கலந்துகொள்வார்கள்.இந்த நிலையில் இன்று இந்த தேரோட்டத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.


மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம்  சிவஞான பாலய சுவாமிகள் தேரோட்டத்தினை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் தேரை பிடித்து  இழுத்தனர்.தேரோட்டத்தின் போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா முழக்கமிட்டனர்.முழக்கம் வின்னைமுட்டுமளவுக்கு இருந்தது. தேரோட்டத்தினை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கோயில் நிர்வாகம் பல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Share This Article
Leave a review