என் கேர்ள் பிரெண்ட் தனலட்சுமிகிட்ட போலீஸ் தப்பா நடந்துகிட்டாங்க! ஜாமீன் கேட்டு மெரினா போதை நபர் மனு.!

0
22
  • சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் என்பவர் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உட்பட 5 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், சந்திரமோகன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
காவல்துறையினர் தன்னையும், தன் மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தன்னுடைய தோழியிடம் தவறாக நடந்து கொண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/women-and-children-are-protesting-in-meenjur-panchayat-union-kammavarpalayam-panchayat-demanding-hundred-days-work/

இந்த வழக்கு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here