இந்திய நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் அதிமுக அணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இன்னும் ஒரு சில நாட்களில் பேச்சு வார்த்தை முடிவடைந்து தொகுதிகளை அறிவிக்க உள்ளது.அதே போன்று திமுக கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.அதுவும் கூட முடிவடையும் நிலையில் உள்ளது.இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் திமுக பேச்சு வார்த்தை நடத்திவரும் சூழலில்.
“திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே எந்தக் கசப்பும் இல்லை; இந்தியா கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்” என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்தியா கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, “தி.மு.க., வி.சி.க இடையே எந்தக் கசப்பும் இல்லை எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம்” என்றார்.
இது குறித்து அவர் பேசுகையில், “திமுக, விசிக இடையே எந்தச் சிக்கலும் இல்லை; சீட் பகிர்வு விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண்போம்.
தி.மு.க.விடம் 3 தொகுதிகள் கேட்டுள்ளோம். இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதேபோல் இந்தியா கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என்பதிலும் உறுதியாக இல்லை. இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை” என்றார்.நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இம்மாதம் அறிவிக்கப்பட்டு, ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இந்தியா கூட்டணி அமைத்துள்ளது.இந்தக் கூட்டணியில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவ சேனா, இடதுசாரிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 26க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியாகவும், அதிமுக, பாஜக தனித்தனியாகவும் தேர்தலை சந்திக்க உள்ளன. முன்னதாக திருமாவளவன் திமுக கூட்டணியிடம் 4 தொகுதிகள் கேட்டிருந்தார்.இதில், ஒரு பொதுத்தொகுதியும் அடங்கும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விசிக திமுக கூட்டணி உடன் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது என்பது நினைவு கூரத்தக்கது.அதே போன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதன் சின்னத்தில் தான் போட்டியிடும் என திருமா ஏற்கனவே அறிவித்திருந்தது.அதே போன்று அக்கட்சி அதன் சின்னத்தில் போட்டியிடும் என்பதில் அதன் தலைவர் உறுதியாக இருக்கிறார்.விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும்.