கடந்த 2022 ம் ஆண்டு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பிகார் பயணத்தின் போது அவரது வருகையை தடுக்கும் முயற்சியாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது .
இந்த சம்பவம் தொடர்பாக கடந்த 2022 ம் ஆண்டு , ஜூலை மாதம் 22 ம் தேதி , பிகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள புல்வாரி ஷெரீப் காவல் நிலையத்தில் முதற்கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிறகு இந்த வழக்கினை தேசிய பாதுகாப்பு நிறுவனமான NIA (என்ஐஏ) வுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து ஒருவருட காலமாக மத்திய பாதுகாப்பு நிறுவனத்தால் விசாரிக்க பட்டுவருகிறது . அவர்களுது விசாரணையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் இதற்கு பின்னணியில் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 16 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் பின்னணியில் மேலும் பல குற்றவாளிகள் இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் , இன்று காலை முதல் தமிழ் நாடு ,உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் டெல்லி உள்ளிட்ட 6 கும் மேற்பட்ட மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக மதுரையை முகாமிட்டு என்ஐஏ அதிகாரிகள் மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது தாஜுதீன் என்பவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது மதுரையின் மிக முக்கிய வீதியான ஷாஜிமா தெரு மதுரை காவல்துறை மற்றும் என்ஐஏ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட என்ஐஏ அதிகாரிகள் முகம்மது தாஜுதீனுக்கு தடைசெய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பினருடன் தொடர்பு உள்ளதா என்பன போல பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினர்.

தான் ஒரு அப்பாவி என்றும் இதுவரை தான் பீகாரருக்கு சென்றதே இல்லை என்றும் தனக்கும் எந்த அமைப்பினருடனும் தொடர்பில்லை என்று தெரிவித்த பின்னர் என்ஐஏ அதிகாரிகள் அவரது செல்போனை பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தாஜூதீன் “நான் இதுவரை ஒருமுறை கூட பீகாரருக்கு சென்றதில்லை . எனக்கு எந்த அமைப்பினரிடமும் தொடர்பு இல்லை இந்நிலையில் பீகார் வழக்கு தொடர்பாக என்னிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்தி செல்போனை எடுத்துச் சென்றுள்ளனர் . நான் இஸ்லாம் மதத்தை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை போன்ற இளைஞர்களை அச்சுறுத்தும் நோக்கில் NIA அதிகாரிகள் இது போன்ற விசரணையை நடத்தி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
மதுரை மாநகரில் முஸ்லீம் இளைஞரிடம் தேசிய பாதுகாப்பு நிறுவனமான NIA விசாரணை மேற்கொண்ட சம்பவம் தமிழ் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.