- தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முரசொலி எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைமேடைகளில் நிழற்கூரை, பயணிகள் காத்திருப்பு அறை அமைக்கவும் வலியுறுத்தினார்.
ரெயில் நிலைய பணிகள் தஞ்சை ரெயில் நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு புரனமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை விரைவாக முடிப்பது குறித்தும், 2-வது கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் தஞ்சை எம்.பி. முரசொலி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தஞ்சை ரெயில் நிலையத்தின் பின்பகுதியில் 2- வது கட்டமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 1-வது நடைமேடையில் நிழற்கூரை இல்லாத இடங்களில் நிழற்கூரை அமைக்க வேண்டும். 2, 3-வது நடைமேடைகளில் பயணிகளுக்கு காத்திருப்பு அறை அமைக்க வேண்டும். ரெயில்வே போலீஸ் நிலையம் நடைமேடையை விட பள்ளமான பகுதியில் இருப்பதால் மழை காலங்களில் தண்ணீர் புகுந்து விடுவதால் போலீஸ் நிலையத்திற்கு மாற்ற இடம் ஏற்பாடு செய்ய வேண்டும் என முரசொலி எம்.பி. கேட்டுக்கொண்டார்.
கீழ்பாலத்தில் ஆய்வு பின்னர் தஞ்சை மேரீஸ்கார்னர் ரெயில்வே கீழ்பாலத்தை, அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். அப்போது மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகள் இணைந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகர்- மருத்துவக்கல்லூரி சாலை இடையிலான ரெயில்வே கீழ்பாலம், ராஜப்பாநகர் பகுதியில் உள்ள ரெயில்வே கீழ்பாலம், சோழகம்பட்டி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே கீழ்பாலம் ஆகிய இடங்களில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் போக்குவரத்துக்கு உகந்ததாக மாற்ற தேவையான நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/higher-education-minister-kovi-chezhian-held-a-press-conference-in-thanjavur/
அப்போது துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், முதன்மை திட்ட ரெயில்வே மேலாளர் நசீர்கஅமது, ரெயில்வே கோட்ட காதுகாப்பு அதிகாரி தட்சிணாமூர்தி, ரெயில்வே கோட்ட பொறியாளர் ரவிமிட்டல், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார், உதவி கோட்ட பொறியாளர் கீதா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.