- நேற்றிரவு பணிக்கு வந்த மாநகராட்சி தூய்மை பணியாளர் தூக்கிட்டு தற்கொலை.
தஞ்சாவூர் வண்டிக்கார தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52). இவர் தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பணிக்காக நேற்றிரவு வழக்கும் போல வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை பணிக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அலுவலகத்தை திறந்து பார்த்தபோது சுப்பிரமணியன் உள்ளே தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/minister-dsenthil-balaji-appeared-in-the-chennai-principal-sessions-court-for-the-second-day-for-the-investigation-of-the-enforcement-department-case/
மேலும் வழக்கு பகுதி செய்து காவல்துறையினர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமாக அல்லது வேறு எது காரணமா? என்று விசாரனை செய்து வருகின்றனர்.