ஒருபுறம், ‘தி கேரளா ஸ்டோரி’ திரை இடக்கூடாது என்று நாடு முழுக்க சூடுபிடித்துள்ள நிலையில், கடந்த 3 மாதங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சுமார் 5 ஆயிரத்து 600 இளம்பெண்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 2,200 சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கின்றது . தினமும் சராசரியாக 70 பெண்கள் காணாமல் போகின்றனர்.

இது குறித்து மாநில மகளிர் ஆணையத்தின் தலைவி ரூபாலி சகங்கர் தனது ட்விட்டரில் பக்கத்தில் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் . மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி மாதத்தில் 1,600 சிறுமிகளும், பிப்ரவரியில் 1,810 பேரும், மார்ச் மாதத்தில் 2,200 சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காணாமல் போகும் சிறுமிகள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நம்மை கவலையடையச் செய்கிறது. மேலும் இது துரதிர்ஷ்டவசமானது.
கடந்த 2020ல் இருந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. சிறார்களின் அடையாளத்தை சட்டத்தின் மூலம் வெளிப்படுத்த முடியாது, எனவே இந்தத் தரவு காவல்துறையின் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. இந்த புள்ளிவிவரங்களில் கடத்தப்பட்ட சிறுமிகள் சேர்க்கப்படவில்லை.
இது மிகவும் கவலையளிக்கிறது காணாமல் போனோர் பிரிவு காவல்துறையின் காரணங்களைக் கண்டறிய வேண்டும்.
மேலும் மாநில மகளிர் ஆணையம் கடந்த 16 மாதங்களாக தொடர்ந்து இதை கண்காணித்து வருகிறது. காணாமல் போன சிறுமிகள் பற்றி தகவல்களையும் அறிக்கைகளையும் அவ்வப்போது கேட்டு வருகிறோம். எல்லா இடங்களிலும் இதற்கான தகவல் மயமொன்றை உருவாக்கியுள்ளோம்.
கடந்த மாதம் நாக்பூரில் நடந்த மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மகளிர் ஆணையம் மேற்கொண்டது. அப்போது மாநில உள்துறை அமைச்சரும் உடனிருந்தார். தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து உள்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். காணாமல் போன புகார்களுடன் வரும் சிறுமிகளை கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த சிறுமிகள் மனித கடத்தலுக்கு இழுக்கப்படுகிறார்கள் காணாமல் போன சிறுமிகள் திருமணம், காதல் மற்றும் வேலை வாய்ப்பு போன்றவற்றால் தவறாக வழிநடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர்.
இந்த விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது என்று கூறிய ரூபாலி சகங்கர், இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.