திருடன் – போலீஸ் கதையைக்கேட்டு மும்பையே அதிர்ந்து போயுள்ளது.!

0
101
திருடன் - போலீஸ் கதையைக்கேட்டு மும்பையே அதிர்ந்து போயுள்ளது.!

மும்பை: திருடன் – போலீஸ் கதையைக்கேட்டு மும்பையே அதிர்ந்து போயுள்ளது. மிக மிக சாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளது, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அப்படி என்ன நடந்தது மும்பையில்?

மும்பை புறநகர் ரயிலில், எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்திருக்கும். அதனால், இதையே சாக்காக வைத்து, செல்போன்கள் திருடு போக ஆரம்பித்தன. சமீப காலமாக, ஒரே ரயிலில், நிறைய செல்போன்கள் தினமும் திருடு போவதாக, போலீசாரே தகவல் வந்தது.. இதனால், மும்பை கேர்வாடி போலீஸார் யாரந்த செல்போன் திருடன்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

‌தீவிரமான விசாரணைக்கு பிறகு, அந்த செல்போன் திருடனின் பெயர் சபீர் அலி என்றும், அந்தத் திருடன் மும்பை புறநகர் பகுதியிலுள்ள மும்ப்ரா என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த திருடனை உடனே கைது செய்யும்படி, மும்ப்ரா பெண் எஸ்.ஐ. கிருபாலியிடம் கேர்வாடி போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால், தான் தற்போது விடுமுறையில் செல்வதால், சில நாள்கள் காத்திருக்கும்படியும், லீவு முடிந்துவந்து, அந்த திருடனை அரெஸ்ட் செய்வதாகவும் அந்த பெண் போலீஸ் அதிகாரி கிருபாலி, கேர்வாடி போலீஸாரிடம் கேட்டுக்கொண்டார்.

‌இதனிடையே, அந்த திருடனின், செல்போன் நம்பர் கேர்வாடி போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அந்த திருடன் இந்த நம்பரைதான் எப்போதும் பயன்படுத்துவாராம். இதையடுத்து, அந்த நம்பரை போலீசார் கண்காணிக்க துவங்கினர். அந்த செல்போனுக்கு யாரெல்லாம் போன் செய்கிறார்கள்? திருடனுக்கு வரும் போன்கள் யாருடையது? இதுவரை திருடன் யாருக்கெல்லாம் போன் செய்திருக்கிறான்? என்ற விவரங்களை கண்டுபிடித்தனர்.

இதில் இந்த 2 மாதத்தில் மட்டும் ஒரே நம்பருக்கு, 100 முறைக்கு மேல் திருடன் போன் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த போன் நம்பர் யாருடையது என்று ஆராய்ந்தால், அது பெண் போலீஸ் அதிகாரி கிருபாலிக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதைக்கண்டு போலீஸார் அதிர்ந்து போனார்கள். திருடனை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, உடனே லீவு போட்டுவிட்டு கிளம்பியதன் காரணமும் இப்போதுதான் புரியவந்தது.

‌இதையடுத்து, திருடனையும், அந்த பெண் போலீஸையும் தீவிரமாக மறைந்திருந்து கண்காணித்தபடியே வந்தனர். கடந்த 8ம் தேதி, அந்த திருடன், நவிமும்பையிலிருந்து மும்பைக்கு நள்ளிரவில் கிளம்பி எங்கேயோ சென்று கொண்டிருப்பதை பார்த்தனர். வழக்கம்போல், திருடனுக்கு தெரியாமலேயே அவரை போலீஸார் பின்தொடர்ந்தனர். கோரேகாவ் ஆரேகாலனி அருகே சென்றபோது, அந்த திருடன் தன்னுடைய போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார்.

திடீர்னு செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்ததால், போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அதனால், பெண் போலீஸ் அதிகாரி கிருபாலியின் போன் எங்கிருக்கிறது என்று பார்த்தனர். அவரும் அதே பகுதியில்தான் இருக்கிறார் என்பது தெரியவந்தது.அதுமட்டுமல்ல, 2 பேரும் பவாய் பகுதியிலுள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கியிருப்பதை போலீஸார் அறிந்து கொண்டனர். அந்த ஓட்டலுக்குள் திடீரென நுழையாமல், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்தனர்.

அதில், திருடனும், பெண் அதிகாரி கிருபாலியும் ஒன்றாக ரூமுக்குள் செல்வது பதிவாகியிருந்தது. நைட் உள்ளே போனவர்கள், மறுநாள் காலையில் 6 மணிக்குத்தான் வெளியில் வந்தனர். ரூம் கதவை திறந்ததுமே, போலீசார் அங்கே தயாராக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததுமே திருடனுக்கும், போலீசுக்கும் குப்பென்று வியர்த்துவிட்டது.

இப்போது அந்த திருடனிடமிருந்து 9 போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த போன்கள், அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கிருபாலிக்கும் சபீர் அலிக்கும் தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மும்ப்ராவை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த புகார் குறித்து விசாரிக்க தனி அதிகாரியை, தானே கமிஷனர் ஜெய்ஜீத் சிங் நியமித்திருக்கிறார் என்றாலும், கையும் களவுமாக வசமாக சிக்கிய அந்த பெண் போலீஸ் அதிகாரிமீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here