தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
அண்மையில், தமிழக சட்டமன்றத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது .
பின்னர், மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர், அந்த மசோதாவை பரிசீலனை செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மசோதா பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில்,” உத்திரபிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக உள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்தமருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது“விதிகளுக்கு முரணானது.” என்கிறார் ஆளுநர். பித்தம் தெளிய சித்தமருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!” என பதிவிட்டுள்ளார்.