மகனை சுட்டு கொலை செய்த மதுரை காவல் அதிகாரி வழக்கை-சிபிஐ க்கு மாற்ற கோரி தாய் வேண்டுகோள்…

2 Min Read
  • தனது மகனை சுட்டு கொலை செய்த காவல் அதிகாரி வெள்ளத்துரை மற்றும் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு விசிரனையை சிபிஐ க்கு மாற்ற கோரி கடந்த 2010 ஆண்டு தொடரபட்ட வழக்கு.

இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதி உத்தரவு.

- Advertisement -
Ad imageAd image

மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த குருவம்மாள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு ,

மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த தனது மகன் முருகன் என்ற கல்லு மண்டையனை கடந்த 16.2 2010 ஆம் ஆண்டு மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் வெள்ளத்துரை , சார்பு ஆய்வாளர் தென்னவன் , தலைமை காவலர் கணேசன் ஆகியோர் சட்டவிரோதமாக சுட்டு கொலை செய்துள்ளனர் .

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் , மேலும் எனது மகன் சட்ட விரோதமாக சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் கூறியிருந்தார் .

இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஹென்றி தீபேன் ஆஜராகி வாதிட்டார்.

மனுதாரர் மகன் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறையினர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை போலீசார் என்கவுண்டர் செய்யப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட காவலர் மீது 302 கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதனை பின்பற்றவில்லை என்கவுண்டர் தொடர்பாக குற்றவியல் நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் ஆனால் வருவாய் கோட்டாட்சியர் இதில் விசாரணை மேற்கொண்டு உள்ளார் . மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 14 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு பதிவு செய்யாமல் உள்ளனர்.

சட்டவிரோதமாக முருகன் என்ற கல்லுமண்டையனை சுட்டு கொலை செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என வாதிட்டார்.

அரசு தரப்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி வாதிடுகையில் , காவல்துறையினரை கொலை செய்ய முயற்சித்த போது தற்காப்புக்காகவே அவர்கள் சுட்டுள்ளனர் இதில் சட்டவிரோதமாக எந்த செயல்களும் நடைபெறவில்லை என வாதிட்டார் .

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

Share This Article
Leave a review