மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், இந்திய ஜனநாயக மாத சங்கம் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

1 Min Read
  • தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில்
    சென்னை அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில் மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், இந்திய ஜனநாயக மாத சங்கம் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

- Advertisement -
Ad imageAd image

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சென்னை சைதாப்பேட்டை அசோக்நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் பேசிய பரம்பொருள் அறக்கட்டளையின் நிறுவனர் மகாவிஷ்ணு என்பவர் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத்திறனாளிகளாக பிறக்கிறார்கள் என்று ஊனத்தை காரணம் காட்டி இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

மகாவிஷ்ணுவை எதிர்த்து பேசிய அப்பள்ளியில் பணிபுரியும் பார்வையற்ற தமிழாசிரியர் சங்கரிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதேபோல் தஞ்சை திருச்சி மாவட்ட பகுதிகளில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிக அளவில் நடைபெற்று வருவதையும் கண்டித்து, பெண்கள் மீதான தாக்குதலுக்கு கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர்.

பேட்டி :
ஜான்சிராணி –
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர்.

Share This Article
Leave a review