போலி நகைகளை,வங்கிகளில் அடமானம் வைத்து பண மோசடி..!

2 Min Read
தமிழ்நாடு கிராம வங்கி

தஞ்சாவூரில், 257 சவரன் தங்க நகைகள் முலாம் பூசப்பட்ட போலி நகைகளை,வங்கிகளில் அடமானம் வைத்து 59 லட்சம் ரூபாய் பண மோசடி செய்த இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி மேனேஜர் காந்திமதி நாதன், அருந்தவபுரம் பெடரல் வங்கி கிளை மேனேஜர் விசாலி இருவரும் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் புகாரின் பேரில் தமிழ்நாடு கிராம வங்கியில், கடந்த 2022ம் ஆண்டு மார்ச்.1ம் தேதி முதல் செப்.30ம் தேதி வரையில், அருந்தவபுரம் திருகோவில்பத்து கிராமத்தை சேர்ந்த ரமேஷ் வயது 54.

ரமேஷ்

இவரது மனைவி பவானி, மற்றும் பவானியின் அம்மா லட்சுமி ஆகியோர் பெயரில், 19 தவனைகளாக 172 சவரன் தங்க நகைகள் முலாம் பூசப்பட்ட, போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து, வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்து பெற்ற பணம் 44.65 லட்சம் ரூபாயும், பெடரல் வங்கியில், ரமேஷ் தனது பெயரிலும், தனது மனைவி பவானி மற்றும் தன்னிடம் வயலில் வேலை பார்த்த அபூர்வம் என்பவருடைய பெயரிலும் 8 தவனைகளாக 85 சவரன் தங்க நகைகள் முலாம் பூசப்பட்ட போலி நகைகளை வங்கியில் அடகு வைத்து வங்கியில் தங்க நகைகள் அடகு வைத்து பெற்ற பணம் 24.34 லட்சம் ரூபாய் வங்கியில் மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் என்பவர், கடந்த செப்.28ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ரமேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த ரமேஷை போலீசார் புதுச்சேரியில் வைத்து வலவீசி பிடித்து, நேற்று காலை ரமேஷை கைது செய்தனர்.

முருகையன்

அவரை தொடர்ந்து நடத்திய விசாரணையில், மன்னார்குடியை சேர்ந்த முருகையன் வயது 49, என்பவர் கும்பகோணம், சிதம்பரம் போன்ற பகுதிகளில் கவரிங் நகை செய்பவர்கள் மூலமாக நகை செய்து வந்தது தெரியவந்தது. மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற பகுதிகளில் பல தனியார் நகை நகைகளை அடகு கடை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அடகு வைத்து மோசடி செய்துள்ளார். நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

அவருடன் ரமேஷ்க்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், முருகையனுடன் இணைந்து போலி நகைகளை வைத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் இருவரையும் கைது செய்து, பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Share This Article
Leave a review