இந்தியா – மடகாஸ்கர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த மோடி உறுதி!

1 Min Read
பிரதமர் மோடி

துபாயில் நடைபெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு இடையே, மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ரஜோலினாவை, பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். இரண்டு தலைவர்களுக்கு இடையேயான முதல் சந்திப்பு இதுவாகும்.

- Advertisement -
Ad imageAd image

இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவு, பழங்கால உறவுகள் குறித்து இரு தலைவர்களும் உரையாடினார்கள். இருதரப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்ததுடன், ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு பலதரப்பு அரங்குகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி

இந்தியா – மடகாஸ்கர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும், இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு, வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை உருவாக்கவும் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளரும் நாடு என்ற முறையில், மடகாஸ்கரின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா ஒரு உறுதியான கூட்டாளியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Share This Article
Leave a review