அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு..!

2 Min Read

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு இன்று மீண்டும் விசாரிக்கிறது. தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருக்கும் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சட்டவிரத பண பரி வர்த்தனை தடை சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜி – சுப்ரீம் கோர்ட்டு

இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுத்த உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம். திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 30 ஆம் தேதி விசாரித்தது. செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதையடுத்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் 20 ஆம் தேதிக்கு (இன்றைக்கு) தள்ளி வைத்தது. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் வேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு இன்று (திங்கட்கிழமை) விசாரிக்கிறது

Share This Article
Leave a review