இன்று அதிகாலை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பதாகவும் அதனை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் பூரண குணமடைந்து விரைவில் நலம் பெற வேண்டி திரைப்பட நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி அவருடைய குருநாதராக வணங்கும் திருவண்ணாமலையில் உள்ள மூக்குபொடி சித்தர் ஜீவ சமாதியில் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் குணம் பெற வழிபட்டார்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர் மேலும் மத்திய அரசின் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது என்னும் வகையில் பல அரசியல் கட்சியினர் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.
