கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் குடும்பத்தாருக்கு இழப்பீடு தொகை

3 Min Read
இப்ராஹிம்

விழுப்புரத்தில் கடந்த வாரம் சகோதரர்களால் கொலை செய்யப்பட்ட இப்ராஹிம் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு சார்பில் முதல்வர் அறிவித்த இரண்டு லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

மேலும் நகர திமுக சார்பாக ஒரு லட்சம் நிதி உதவியும் அளித்தார் அப்பொழுது விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி, எஸ். பி ஸ்ரீநாதா சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் லட்சுமணன், புகழேந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .

கொலை வழக்கில் சிறையில் உள்ள இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி தகவல்.

எஸ்பி நேரில் விசாரணை 

விழுப்புரம் காந்தி வீதியில் பல்பொருள் அங்காடி ஊழியர் விழுப்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அபுபக்கர் மகன் இப்ராஹீம் (வயது 45). இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இவர் வீட்டிலிருந்து வந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை மாலை நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக இப்ராஹீம், தான் வேலை பார்க்கும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றார்.
அந்த சமயத்தில் அந்த கடைக்குள் பதுங்கி நின்ற ஒரு பெண்ணிடம் இரண்டு வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்ததோடு அவரை திட்டி தாக்கினர்.

இதைப்பார்த்த இப்ராஹீம் மற்றும் அரசமங்கலத்தை சேர்ந்த ராமதாஸ் மகன் தீபக் (23) ஆகிய இருவரும் அவர்களைத் தட்டிக்கேட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் இருவரும், இப்ராஹீம், தீபக் ஆகிய இருவரையும் தாக்கியதோடு தாங்கள் வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

இதில் இப்ராஹீமின் வயிற்றிலும், தீபக்கின் முகத்திலும் காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிறிது நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட இப்ராஹீம் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். உடனே அந்த வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அவர்களை அங்கிருந்த கடை ஊழியர்கள் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் இதுபற்றி விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன்,மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மூர்த்தி, உதவி ஆய்வாளர் மருது மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இப்ராஹீம், தீபக் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் செல்லும் வழியிலேயே இப்ராஹீம் பரிதாபமாக இறந்தார். தீபக் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே பிடிபட்ட 2 வாலிபர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்த ஞானசேகரன் மகன்கள் ராஜசேகர் (33), வல்லரசு (24) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் . இன்று காலை தமிழ்நாடு உயர்கல்வி துறை அமைச்சர் க பொன்முடி , கொலைசெய்யப்பட்ட இப்ராஹிம் குடும்பத்தாரைச் சந்தித்து அவர்களுக்குத் தமிழ் நாடு அரசு அறிவித்த 2 லட்ச ரூபாய் நிவாரண தொகையை வழங்கி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார் .

ஏற்கனவே பாதிக்கப்பட்ட இப்ராஹிம் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் 1 லட்ச ரூபாய் பணமும் , திமுக சட்டமன்ற உறுப்பினர் லக்ஷ்மணன் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கியது குறிப்பிடத்தக்கது .

Share This Article
Leave a review