பொழுது போக்கு அம்சங்கள் இல்லாமல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது இது மக்களுக்கு அதிருப்தியாக இருக்கிறது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு உனக்கு தான் அதிருப்தியா இருக்கு மக்களுக்கு இல்லை என அமைச்சர் கே.என்.நேரு நக்கலடித்தார்
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் சிவகங்கை பூங்கா பழமை மாறாமல் புரைமைக்கப்பட்டது.
பூங்காவை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில். மகேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
பின்னர் பூங்காவை சுற்றி பார்த்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் சிவகங்கை பூங்கா புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது
இது தஞ்சை மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக விளங்கும் என்றார்.
ஒவ்வொரு பேரூராட்சியிலும் 18 கோடி, 20 கோடி மதிப்பில் குடிநீர், மார்க்கெட், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
விரைவில் தமிழ்நாடு முழுவதும் 30 பேரூராட்சி பகுதிகள், 20 நகராட்சி பகுதிகள், மாநகராட்சி பகுதிகளில் இந்த திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து திறக்க இருக்கிறோம் என்றார்.
பூங்கா மூடுவதற்கு முன்னர் 2018 ல் வனவிலங்குகள், நீர் சறுக்கு, தொங்கு பாலம் படகு சவாரி இருந்தது இப்போது இல்லாமல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு அதிருப்தியாக இருக்கிறது என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நேரு உனக்கு அதிருப்தியா இருக்கு மக்களுக்கு இல்லை என நக்கலடித்தார்