அமைச்சர் எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் மீண்டும் ரெய்டு – வருமான வரித்துறை அதிகாரிகள்..!

2 Min Read

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் குடும்பத்தினருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. அதன் வளாகத்தில் நிறுத்தபட்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் கார்கள்.

- Advertisement -
Ad imageAd image

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலு குடும்பத்தினருக்கு சொந்தமான அருணை மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள், வீடுகள், அவருடன் தொடர்பில் இருந்த காண்ட்ராக்டர்கள் இருந்த வீடுகளில் போன்ற சொத்துக்கள், கடந்த 3 முதல் 7 வரை, தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் உள்ள அமைச்சர் எ.வ.வேலு வீட்டிலும் சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த அதிரடி சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அப்போது அருணை மருத்துவ கல்லூரியில் முக்கிய ஆவணங்கள் உள்ள மூன்று அறைகளுக்கு சீல் வைத்தனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள்

இந்த சோதனை தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்தது. இந்த சோதனையின் போது எ.வ. வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் அங்குலம் அங்குலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர், தனித்தனியே மூன்று கார்களில் வந்தனர். அதனை தொடர்ந்து அருணை மருத்துவ கல்லூரியில் மீண்டும் சோதனை நடத்தி, சீல் வைக்கப்பட்ட அறைகளையும் பார்வையிட்டனர். அப்போது மத்திய பாதுகாப்பு படையின் 20 வீரர்கள் உடனிருந்தனர். அதேபோல, கல்பாக்கம் அடுத்த குன்னத்தூரைச் சேர்ந்த ராஜபிரகாஷ் என்பவர், வீட்டிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்றது.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

இவர் பல கட்சிகளில் இருந்து வந்தவர். தற்போது தி.மு.க கட்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர், அவரது வீட்டில் நேற்று சோதனை ஆய்வு நடத்தினர். மேலும் காலை 10:30 மணிக்கு துவங்கிய சோதனை மாலை 6:30 மணி கடந்தும் சோதனை நீடித்தது. அப்போழுது, தமிழக அமைச்சர் ஒருவர், அதே ஊரில் 30 ஏக்கர் இடம் வாங்கியதாகவும், அதன் பண பரிமாற்றம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையாக இருக்கலாம் எனவும், அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Share This Article
Leave a review