அமைச்சர் எ.வ. வேலு வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை சோதனை நிறைவு ..!

8 Min Read

திருவண்ணாமலையில் கடந்த 3- ஆம் தேதி தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் கடைகளிலும், ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் தொடர்ந்து வருமானவரித்துறையினர் 5 தினங்களாக விடிய விடிய சோதனை செய்து வந்த நிலையில், இன்று வருமானவரித் துறையினரின் சோதனை பெற்றது. இந்த நிலையில் வருமான வரித்துறையினர் சோதனை நிறைவடைந்த பின்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தனது இரண்டு மகன்கள் உடன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு, கடந்த நான்கு தினங்களாக சமூக வலைதளங்களில் எத்த அளவுக்கு கற்பனைக்கு உச்சத்துக்கே போய் பல்வேறு முரண்பட்ட தவறான கருத்துக்களை எல்லாம் பரப்பிக் கொண்டிருந்தது குறித்து பேசிய அவர். இந்த ஐந்து நாள் பிரச்சனைகளுக்கு நான் ஒரு விளக்கம் தரனும் அந்த அடிப்படையில் ஐடி ரெய்டு என்பது வருமானவரித் துறையினரின் கடமை என்றும், வருமானவரித் துறையினரின் பணிகளை செய்தார்கள் அதில் ஒன்றும் தவறில்லை என்றும் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

தனது நேர்முக உதவியாளர் சுப்பிரமணியனை தனிமையில் வைத்து தன்னை ஒப்பிட்டு பல்வேறு கேள்விகளை கேட்டு வருமான வரித்துறையினர் தொந்தரவு செய்ததாகவும், அவர் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு வருமான வரி துறையினர் தொந்தரவு செய்ததாகவும் கூறினார். அதேபோல் தனது ஓட்டுநரை தனிமைப்படுத்தி தன்னை ஒப்பிட்டு பல்வேறு தொந்தரவு செய்ததாகவும் கூறிய அவர் அமைச்சருக்கு ஓட்டுனராக இருப்பது தவறா? என்றும் கேள்வி அனுப்பினார். எனது குடும்பத்தில் நான் எனது மனைவி எனது மூத்த மகன் எனது இளைய மகன் ஆகிய நான்கு பேரும் வருமான வரி செலுத்துவதாகவும், என்னை தொடர்பு படுத்தி அனைவரையும் வருமான வரித்துறையினர் தொந்தரவு செய்ததாகவும் கூறினார். நிறைவாக தான் தங்கி இருந்த தங்கும் விடுதியில் சல்லடை போட்டு சலித்து வருமானவரி துறையினர் சோதனை செய்ததாகவும் கூறினார். தன்னை தொடர்பு படுத்தி இந்த வருமான வரித்துறை சோதனையில் விழுப்புரம் கரூர் வந்தவாசி கோவை திருவண்ணாமலையில் பல்வேறு இடங்களில் தன்னை தொடர்புபடுத்தி பல்வேறு இன்னல்களை வருமானவரித் துறையினர் பலருக்கு கொடுத்ததாகவும் வேதனையுடன் கூறினார். தற்பொழுது நடைபெற்ற வருமான வரித்துறையினர் மீது தனக்கு எவ்வித கோபமும் இல்லை என்றும், இவர்கள் அம்பு தான் அம்பு எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள் என்று கூறினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் பொழுது தற்போதைய தமிழ்நாடு முதல்வர் திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பொழுது தனது வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்ததை கண்ணீர் மல்க தெரிவித்த அவர், அந்த சோதனையில் இரண்டு நாள் தனது தேர்தல் பணிகளை மட்டுமே முடக்க முடிந்ததாகவும் அதன் விளைவு என்பது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய நான் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை திருவண்ணாமலை தொகுதி மக்கள் அபார வெற்றி பெற வைத்தார்கள் என்று கூறினார். அடிப்படையில் நான் ஓர் விவசாய வீட்டு பிள்ளை என்றும், அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் அச்சகம் ஒன்றை நடத்தியதாகவும், அதனைத் தொடர்ந்து லாரி ஒன்றை வாங்கி லாரி உரிமையாளராக இருந்ததாகவும், தொடர்ந்து சென்னையில் திரைப்பட விநியோகிஸ்தராக பலம் வந்ததாகவும், தொடர்ந்து பட தயாரிப்பாளராக இருந்ததாகவும் அதிலிருந்து ஈட்டிய வருமானத்தைக் கொண்டு 1991 ஆம் ஆண்டு தனது தாய் பெயரில் சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வந்ததாகவும் கூறினார். அதன் மூலமாக பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி திருவண்ணாமலையை சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பல்வேறு வகையில் பொறியாளர்களாக தொழில் புரட்சி செய்வதற்கு காரணமாக பொறியியல் கல்லூரியை உருவாக்கியதையும் சுட்டி காட்டினார்.

அமைச்சர் எ.வ. வேலு

தொடர்ந்து தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டு தொடர்ச்சியாக ஆறுமுறை மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினராக மக்களுக்கு தொண்டு செய்யும் பணி செய்து வருவதாகவும் கூறினார். திமுக மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கூட யாரேனும் ஒருவர் தான் கையூட்டு பெற்று இருக்கிறேன் என்று கூறினால் அவர்களுக்கு பதில் சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன் என்றும், ஆணித்தரமாக கூறியவர் பொது வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடித்து வருகிறேன் என்றும் கூறினார். மறைந்த தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்கள் 2006 ஆம் ஆண்டு தன்னை உணவுத்துறை அமைச்சராக அறிவித்த உடனே தனது அறக்கட்டளையிலிருந்து விலகி விட்டதாகவும் தற்பொழுது தனது குடும்பம் அதனை நிர்வகித்து வருவதாகவும் கூறினார். தற்பொழுது அந்த அறக்கட்டளையை தனது மூத்த மகன் குமரன் தலைவராக நியமித்து வருவதாகவும் தனக்கும் அந்த அறக்கட்டளைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார்.
திருவண்ணாமலையில் தனக்கு 48.33 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், திருவண்ணாமலை நகரத்தில் உள்ள காந்திநகர் பகுதியில் வீடு கட்டும் சங்கத்தின் மூலமாக தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 33 ஆண்டுக்கு மருத்துவமனைக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னையில் ஓர் வீடு உள்ளதாகவும் இதுவே எனது சொத்து என்றும் தெரிவித்தார்.

தன்னை முழுமையாக நம்பி தமிழ்நாடு முதல்வர் இரண்டு துறைகளை ஒப்படைத்த நிலையிலும் அதனை நம்பிக்கையோடு செயல்படுத்தி வருவதாகவும், இதுவரை தன் பெயரில் ஒரு சென்ட் நிலம் கூட ஏதும் இல்லை என்றும் கூறினார். வருடா வருடம் தான் முறையாக வருமான வரி செலுத்துவதாகவும் வருமான வரி செலுத்தாமல் ஏமாற்றுபவன் இல்லை என்றும், திட்டவட்டமாக கூறினார். தான் உணவுத்துறை அமைச்சராக இருந்தபோது சிறப்பாக பணியாற்றியதாக உச்சநீதிமன்றமே பாராட்டியதை சுட்டிக்காட்டிய அவர், 2013 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களால் தன் மீது 11 லட்சம் சொத்துக்குவிப்பு வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டதாகவும், அதனை முறைப்படி சந்தித்து வழக்கில் இருந்து தான் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய அவர், தன்னை சந்தித்தவர்கள் தனக்கு நெருக்கமானவர்கள், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரிடமும் தன்னை தொடர்பு படுத்தி வருமான வரி துறையினர் நடத்திய சோதனை நியாயம் தானா என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜகவில் எவரும் தொழிலதிபர்கள் இல்லையா என்றும் அவர்கள் வீடுகளுக்கெல்லாம் தினந்தோறும் வருமான வரித்துறையினர் சென்று சோதனை செய்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய அவர், வருமானவரித்துறை சோதனைக்கு எல்லாம் நானோ எங்கள் கழகத் தலைவரோ திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்களோ பயப்படுபவர்கள் அல்ல என்றும் சட்டப்படி நடந்து கொள்கிறோம் நாங்கள் என்றும் சோதனைகளை காட்டி எங்களது தொண்டையோ, உழைப்பையோ நிறுத்தி விட முடியாது என்றும் கூறினார்.

இந்த வருமான வரித்துறை சோதனையால் தனது அரசு பணிகளும் தன்னுடைய கழகப் பணிகளை மட்டுமே தங்களால் முடக்க முடிந்தது என்றும், இன்னும் வேகமாக தனது கழகப் பணியையும் அரசு பணியையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று கூறினார். கழக முன்னோடிகளையும் அமைச்சர்களையும் அச்சுறுத்துவது பயமுறுத்துவது போன்று செயல்கள் இதுவரை நடந்ததில்லை என்றும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலும், பாஜக வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்திலும், எதிர் கட்சிகளை மிரட்டும் தூணில் இதுபோன்று வருமானவரித்துறை சோதனைகள் நடந்துள்ளதா என கேள்வி எழுப்பிய அவர், நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதை ஒட்டி, திமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும், அமைச்சர்களையும் அச்சுறுத்தும் வகையில் ஒன்றிய அரசு நடத்துவது எந்த விதத்தில் நியாயம் இல்லை என்றும் கேள்வி எழுப்பிய அவர், தமிழ்நாடு முதல்வர் மிசாவை பார்த்தவர் என்றும், அவரால் அரவணைக்கப்பட்ட நாங்கள் எங்களுடைய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாகவும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்தான் தங்களுக்கு இலக்கு என்றும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 40 தொகுதி தொகுதிகளையும் வெல்வது தான் எங்களது நோக்கம்.

அமைச்சர் எ.வ. வேலு

இதற்கிடையில் யார் என்ன தலையிட்டாலும், எது செய்தாலும், எங்களது நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் தான் தங்களது கவனம் செல்லும் என்றும் கூறிய அவர், இந்த சோதனை என்பது தங்களை முடக்க வந்ததாக தான் கருதுவதாகவும் கூறினார். காசா கிராண்டிற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும், அவர்கள் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், நூறு சதவீதம் காசா கிராண்டிற்கும் அப்பாசாமிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார். கோவையைச் சேர்ந்த மீனா ஜெயக்குமாருக்கும் தங்களுக்கும் தொடர்பு உள்ளதாக கேள்வி எழுப்பிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர் ஜெயக்குமார் என்பவர் திருவண்ணாமலை சேர்ந்தவர் என்றும், அவரது சகோதரர் முருகன் கட்சி நிர்வாகியாக உள்ளதாகவும் கூறியவர். சிறுவயதிலேயே ஜெயக்குமார் கோவைக்குச் சென்று பல்வேறு தொழில்களை செய்து தொழிலதிபராக இருப்பதாகவும் கூறினார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தான் தனக்கு முதன் முதலில் ஜெயக்குமாரை உள்ளூர் காரர் என அறிமுகம் செய்து வைத்ததாகவும் அதன் அடிப்படையில் தான் கோவை செல்லும் பொழுது அவர் தன்னை சந்தித்ததாகவும், இது கொலை குற்றமா? என்றும் கேள்வி எழுப்பிய அவர், அவர்கள் குடும்பத்தையும் தனது குடும்பத்தையும் தொடர்பு படுத்தி பேசுவது எவ்விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார்.

தனிப்பட்ட முறையில் தனது கேரக்டரை கெடுக்க பலர் நினைப்பதாகவும், அது ஒரு காலத்திலும் நடக்காது என்றும் தெரிவித்தார். தான் நேர்மையானவனாக மனசாட்சிக்கு கட்டுப்பட்டவனாக தலைமைக்கு கட்டுப்பட்டவனாக என்றைக்கும் நான் இருப்பேன் என்றும் கூறினார். என் வீட்டிலோ எனது மனைவி மற்றும் மகன்கள் வீட்டிலோ கல்லூரி வளாகத்திலோ வருமானவரித் துறையினர் சோதனை செய்து, ஒரு பைசா எடுத்து இருந்தாலும் தான் அதற்கு பொறுப்பேற்று பதில் சொல்வதாகவும் பல்வேறு இடத்தில் சோதனை செய்துவிட்டு அங்கு சிக்கிய பணம் தனக்கு சம்பந்தம் என்று கூறுவது நியாயம் இல்லை என்றும், தவறு என்றும் தன் வீட்டிலும் தனது மகன்கள், மனைவி கல்லூரி நிர்வாக உள்ளிட்ட எந்த இடத்திலும் வருமான வரித்துறையினர் ஒரு பைசா கூட எடுக்கவில்லை என்றும் தெரிவித்த அவர், கடந்த நான்கு தினங்களாக வெளிவரும் செய்திகள் வதந்தி என்றும் கூறினார். அபிராமி ராமநாதன் என்பவருக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்றும், இதுவரை அவரை சந்தித்ததே இல்லை என்றும் தெரிவித்தார். திருவண்ணாமலையில் ஒப்பந்ததாரர் அருணை என்பவர் வீட்டில் மற்றும் அலுவலகத்தில் பணம் வருமானவரித் துறையினரால் கையகப்படுத்தியதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Share This Article
Leave a review