இப்போதெல்லாம் போதிப்பொருட்களுக்கு என்ன பெயர் என்பதே விளங்கிக் கொள்ள முடியாத நிலை இருந்து வருகிறது. அந்த சூழ்நிலையில் தான் சூலூரில் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதை பொருளை வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் சூலூர், அடுத்த நீலாம்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் உயர்ரக வெளிநாட்டு போதைப் பொருள்கள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பலரை சோதனை செய்தனர் அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 2 இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை கொண்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களது உடைமைகளை சோதித்தபோது, அதில் சந்தேகத்துக்கிடமான வகையில் வெள்ளை நிற பொட்டலம் ஒன்று இருந்தது.
போலீசார் இது குறித்து இளைஞர்களிடம் கேட்டபோது பதில் அளிக்காமல் இருந்தனர். இதையடுத்து மூவரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் இளைஞர்கள் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்த நந்த கிருஷ்ணா மற்றும் வருண் என்பதும், நவ இந்தியாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்தது. மேலும் கேரள மாநிலம், பாலக்காடை சேர்ந்த முகமது அரஷத் என்பவருடன் சேர்ந்து வெளிநாடுகளில் இருந்துமெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தி வந்து விற்பனை செய்யும் நபர்களிடமிருந்து வாங்கி கோவையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. பின்னர் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நவஇந்தியா அருகே பதுங்கி இருந்த முகமது அஷ்ரத்தையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 60 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்டமெத்தபெட்டமைனின் மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் என போலீசார் கணக்கிட்டுள்ளனர்.