- பேராவூரணி அருகே காந்தி ஜெயந்தி மதுபான கடைகள் விடுமுறையை பயன்படுத்தி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 287 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்- ஒருவர் கைது- மற்றொருவர் தலை மறைவு.
தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராம்குமார், ரவீந்திரன் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல்துறையினர்
குழு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள் விடுமுறையை பயன்படுத்தி மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்து கள்ளத்தனமாக விற்பனை செய்கிறார்களா என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் பள்ளத்தூர் கடை தெருவில் சந்தேகப்படும்படியாக நின்ற பண்ணைவயல் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் என்பவரை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்து அவரிடம் விசாரணை செய்த போது அவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-madras-high-court-has-condemned-that-if-permanent-associate-and-assistant-professors-cannot-be-appointed-in-government-law-colleges-the-colleges-may-be-closed/
இதனை அடுத்து அருகில் இருந்த கீற்றுக் கொட்டகைகளில் மூட்டைகளில் கட்டப்பட்டு பதிக்கி வைத்திருந்த 287 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து சற்குணத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது தில்லங்காட்டை சேர்ந்த விவேக் என்பவர் தன்னிடம் இந்த மது பாட்டில்களை விற்பனை செய்ய கொடுத்து வைத்திருந்ததாக தெரிவித்த நிலையில் தலைமறைவான விவேக்கை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.