சிறுதானியங்களின் தேவை நம் உடல் நலத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் சிறுதானியங்களை பொதுமக்கள் எளிதாக பெறக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். எனவே
”கூட்டுறவுத்துறை சூப்பர் மார்க்கெட்களில் சிறுதானியங்கள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என, கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மதுரையில் தெரிவித்தார்.
மதுரை, பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில், பாண்டியன் சில்க்ஸ் விற்பனை நிலையத்தை, துறை செயலர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி நேற்று திறந்து வைத்தார்.
அப்போது ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
இந்தாண்டு, சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு, கூட்டுறவு சூப்பர் மார்க்கெட்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள, 22 ஆயிரம் சங்கங்கள் மக்களின் அன்றாட வாழ்வியல் சேவையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விற்பனையாகக்கூடிய பொருட்களை சூப்பர் மார்க்கெட்களில் விற்க அறிவுறுத்தியுள்ளோம். கூட்டுறவு கடன் சங்கங்களை, ‘ரூரல் மார்ட்’ ஆகவும் பல்முனை சேவை மையமாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு கடன் சங்கங்கள் அனைத்தும், 2024 டிச., 31க்குள், ‘கோர் பாங்கிங்’ இணைப்பில் கொண்டு வரப்படும். இதற்காக, ‘நபார்டு’ வங்கியுடன் இணைந்து, 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம், 24 வகையான கூடுதல் பணிகளை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். மொத்தம், 5,784 ரேஷன் கடைகளுக்கு, ஐ.எஸ்.ஓ., சான்றிதழ் பெற்றுள்ளோம்.
என்று அவர் பேசினார்.