நடுவிக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 49 வயதான நபர் கைது .
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாட்டில் கடந்த 12 ஆம் தேதி இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மிக பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (49 ) என்பவர் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/minister-kn-nehru-copied-the-reporters-question-that-the-park-has-been-opened-without-recreational-facilities-people-are-dissatisfied-you-are-the-ones-who-are-dissatisfied-not-the-people/
இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதனை அடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுப்பிரமணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சேதுபாவாசத்திரம் பகுதியில் சுற்றி திரிந்த சுப்பிரமணியை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடு புகுந்து இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொஞ்சம் இதையும் படிங்க :https://thenewscollect.com/environment-activists-condemn-incident-of-removal-of-palm-trees-near-kumidipoondi/