- மு.க.ஸ்டாலின் விருது பெற உள்ள உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தை சந்தித்து தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், ஆயிரக்கணக்கான திமுகவினர் வாழ்த்து. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட திமுக விருக்கும் அளித்த விருது என்றும், தலைமைக்கும், தலைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என பழநி மாணிக்கம் மகிழ்ச்சி.
தி.மு.க. உயர்விலும் தாழ்விலும் தோளோடு தோள் நின்று கட்சியை காத்த தீரர்களுக்கு ஆண்டுதோறும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தி.மு.க. 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் இந்நேரத்தில் கட்சியை 6-வது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் பெயரில் இந்த ஆண்டு முதல் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருது சென்னையில் நடைபெற உள்ள தி.மு.க. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் இன்று தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள எஸ்.எஸ். பழனிமாணிக்கதத்தின் இல்லத்திற்க்கு நேரில் சென்ற தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைத்து நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானவர்கள் நேரில் சந்தித்து . மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.. .
இந்த நிகழ்ச்சியில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.யுமான முரசொலி, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் , மேயர் சண்.இராமநாதன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி ,தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட துணை செயலாளர் கனகவல்லி பாலாஜி, மாவட்ட பொருளாளர் அண்ணா, மாநகர செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி , ஒன்றிய நகர கழக செயலாளர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்..
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திரு.எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்.
1980 ம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் மன்னை நாராயணசாமி அவர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது, தற்போது முதல்வர் பெயரிலான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது தஞ்சை மாவட்ட திமுகவினருக்கு வழங்கப்பட்ட விருதாக கருதுகிறேன், மேலும் உற்சாகத்துடன் பணி செய்ய வாய்ப்பாக கருதுகிறேன்.. விருது அறிவித்த கழகத்திற்க்கும், தலைவருக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்..
எஸ்.எஸ்.பழநிமாணிக்கம்
மு.க.ஸ்டாலின் விருது அறிவிக்கப்பட்டவர்