கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசியலமைக்கும் டி கே சிவக்குமார் மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று பேசியது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து பேசி உள்ளார்.
மேகதாது அனைத்து தொடர்பாக தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளனர் அதேபோன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் வரும்போது ஒரு போதும் தமிழகம் இதை அனுமதிக்காது காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு அரசாங்கத்திற்கு உறுதியாக நிற்கும் என்று கூறியிருந்தார்.
சென்னையில் வரும் 2024 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் 9 நாள் பயணம் நிறைவடைந்ததை அடுத்து தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் புறப்பட்டார். சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி, எம்.எல்.ஏக்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலினிடம், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், “இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமாக பதில் அளித்திருக்கிறார். அதை நானும் படித்து பார்த்தேன். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.” என்று தெரிவித்தார்.