மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவது போல நாடகமாடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சட்டமன்றத் தலைவர் ப.தனபால் அவர்களை நாற்காலியிலிருந்து இழுத்து கீழே தள்ளியவர்கள் திமுகவினர்.
மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 20 ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டுக்கான லோகோவை வெளியிட்டார்
அதன் பின்பு செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.
மதுரையில் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு ஏற்பாடு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசித்தோம்.
அதிமுக பல சரித்திர சாதனை படைத்த கட்சி.எம்ஜிஆர் தோற்றிவித்த அதிமுக வை புரட்சி தலைவி ஜெயலலிதா வழிநடத்தினார். தற்போது ஆலமரம் போல் அதிமுக தளைத்து ஓங்கி நிற்கிறது.
அதிமுக வரலாற்றில் சரித்திரம் படைத்துள்ளது. 5 ஆண்டுக்கு ஒரு முறை புதிய உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் 2018 ககு் பிறகு மீண்டும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் பணி அமைப்பு ரீதியில் நடைபெற்று வருகிறது.
1 கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இது வரலாற்று சாதனை.அதிமுகவை வீழ்த்த திமுக எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றினார்கள். அதை கழக நிர்வாகிகள் தகர்த்தெடுத்துள்ளனர். பல விமர்சனங்கள் வந்தது கட்சி 3 ஆக போய்விட்டது.4 ஆக போய்விட்டது என்று ஊடகம் பத்திரிகைகளில் விமர்சித்தார்கள்.இதற்கெல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் நிகழ்வாக ஒன்றரை மாதத்தில் சாதனை படைத்துள்ளோம்.இனி ஊடகங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்.
தமிழகத்தில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக அதிமுக இருக்கிறது.சிலர் இயக்கத்தை முடக்க சதி செய்தார்கள். 75 நாட்களில் அதிமுக உடையவில்லை. சிந்தவில்லை. சிதறவில்லை. ஒற்றுமையாக இருக்கிறார்கள். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை நனவாக்குவோம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக மதுரை மாநாடு் அமையும்.
அதிமுக ஆட்சியில் மேகதாது, காவிரி விவகாரத்தில்உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியது. அரசியல் செய்ய கர்நாடக காங்கிரஸ் நாடகத்தை அரங்கேற்றி உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் சட்டபோராட்டம் நடத்தினார்.உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றோம். 22 நாட்கள் நாடாளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த குரலோடு குரல் எழுப்பினார்கள். அதனால் தான் காவிரி ஆணைய ஒழுங்காற்று குழு அமைக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் ஒருங்கிணைப்போம் எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கர்நாடகாவில் பேச முடியவில்லை.ஜூன் மாதம் பெறவேண்டிய 9 டிஎம்சி தண்ணீரை ஏன் பெறவில்லை.
நீர்ப்பாசன அமைச்சர் சிவக்குமார் கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்க செயல்படுகிறார்.
மருத்துவதுறையில் அதிமுக 10 ஆண்டுகாலம் சாதனை படைத்தோம்.கொரோனா தொற்றின்போது சிறப்பான மருத்துவ சேவை அளிக்கப்பட்டது.தற்போது மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்குநிர்வாக திறமை இல்லை.

இதனால்தான் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது.மருத்துவதுறை சீரழிந்து விட்டது. வேதனையான விசயம். கடலூரில் சளிக்கு பதிலாக நாய்கடி மருந்தை அளிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் 3 மருத்தவ கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இல்லை. 500 மருத்துவ மாணவர் இடங்கள் கேள்விக்குறியாகி விட்டது.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை வரை போய் சேரவில்லை. முதலமைச்சர் உணர்ந்து தேவையான நீரை வழங்க வேண்டும்.
வெங்காயம் இஞ்சி தக்காளி போன்ற விலைபொருட்கள் 70 சதவீதம் விலை உயர்திருக்கிறது.நாட்டில் விலை வாசி ஏறிப்போச்சி. இது கட்டுபடுத்த தவறும் அரசு ரெட்ஜெயின்ட் மூவிஸ் மாமன்னன் படம் எப்படி ஓடுகிறது என கேள்வி எழுப்புகிறார்கள். மாமன்னன் எப்படி தியேட்டரில் ஓடுகிறது என்பது இதுவா மக்களுக்கு தேவை.
மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எழுச்சி ஏற்படுத்துவது போல நாடகமாடுகிறார்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சட்டமன்றத் தலைவர் ப.தனபால் அவர்களை நாற்காலியிலிருந்து இழுத்து கீழே தள்ளியவர்கள் திமுகவினர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிமுக ஆட்சியில் தான் கல்வி புரட்சி ஏற்படுத்தப்பட்டது. அனைத்து மதத்துக்கான கட்சி அதிமுகதான்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும்போது அதிமுக கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.