நெகிழி மக்காத குப்பை ஆகையால் மக்களால் பாவித்து விட்டு தூக்கி வீசப்படும் ஒவ்வொரு நெகிழியும் மண்ணை மலடாக்குகின்றது.
அழகான நதிகளின் அழகை சிதைக்கிறது அங்கு வாழும் உயிரினங்களையும் சுவாசிக்கவிடாது செய்கிறது.
இந்தியாவின் கங்கை நதியில் நெகிழி மாசடைவுகளால் ஓஸ்ய்ஜ்ன் அளவு நதியில் குறைந்து அங்கு நீர்வாழ் உயிரிகள் பல அழிந்துள்ளன.
மயிலாடுதுறையில் நெகிழி பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து மயிலாடுதுறை நகராட்சி மற்றும் தேசிய பசுமை படையுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இப்பேரணியை நகர மன்ற தலைவர் செல்வராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இப்பேரரனயில் தொழில்நுட்பக் கல்லூரி, சமுதாயக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மஞ்சள் பையை பயன்படுத்துவோம், மாசில்லா மயிலாடுதுறையை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு முழக்கங்களுடன் நகரில் முக்கிய வீதிகளின் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.
பேரணியின் பொதுஇடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டக்கூடாது, மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை நகராட்சி ஊழியர்களிடம் தரம் பிரித்து வழங்க வேண்டும்,
மேலும் சூடான உணவு பொருட்களை பிளாஸ்டிக் பையிலோ அல்லது பிளாஸ்டிக் பிலடெலோ உணவு அருந்த வேண்டாம் என்று பல விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.பொதுமக்கள் அனைவருக்கும் மஞ்சள் பை விநியோகம் செய்யப்பட்டது.