Marakkanam Spurious Liquor : இன்று மேலும் ஒருவர் பலி., 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

2 Min Read

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் விஷச்சாராயம் அருந்திய சம்பவத்தில் , இன்று பலி எண்ணிக்கை 14 ஆக கூடியுள்ளது . மேலும் தொடர் சிகிச்சை பயனாக ஒரு பெண் உட்பட 15 பேர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image


கடந்த 13 ஆம் தேதி இரவு , எக்கியர்குப்பம் மீனவ கிராமத்தில் விஷச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு 70 கும் மேற்பட்டோர் , விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , திண்டிவனம் அரசு மருத்துவமனை , மரக்காணம் அரசு ஆரம்பச் சுகாதார மருத்துவமனை , புதுச்சேரி அரசு மருத்துவமனை , ஜிப்மர் மருத்துவமனை ,புதுவை பிம்ஸ் மருத்துவமனை உட்பட  மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை வரை ஒரு பெண் உட்பட 13 உயிர் பலியாகிய நிலையில்,  இன்று காலை எக்கியார்குப்பத்தை சேர்ந்த கன்னியப்பன் (50) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . கன்னியப்பன் உட்பட இன்றுடன் மொத்தமாக  14 பேர் பலியாகி உள்ளனர் .


இதனைத் தொடர்ந்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40 கும் மேற்பட்டோரும்  , புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 1 , புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 6 பேரும் , மரக்காணம் அரசு ஆரம்பச் சுகாதார மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 50 கும் மேற்பட்டோர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் , 10 கும் மேற்பட்டோருக்கு , கண் பார்வை ,சிறுநீரகம் , கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை அருந்தியதால் செயல் இழந்திருப்பதாகவும் , அவர்களுக்கு டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் , அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் விஷச்சாராயம் அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த 42 பேரில், ஒரு பெண் உட்பட 15 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர்.

Share This Article
Leave a review