கேரளாவில் மீண்டும் மாவோயிஸ்ட்கள்..!

2 Min Read

கேரளாவில் மாவோயிஸ்ட்களுக்கும் தண்டர் போல்ட் போலீசாருக்கும் நேற்றைய தினம் நடந்த துப்பாக்கி சண்டை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு.

- Advertisement -
Ad imageAd image

மாவோயிஸ்டுகளுக்கும் மாநில போலீசாருக்கும் இடையே நேற்று இரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த மோதலின் போது 2 மாவோயிஸ்டுகள் சிக்கினர். தப்பி ஓடிய மேலும் 3 தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில் மாவோயிஸ்டுகளுக்கு உதவிய சிலரை முதலில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தான் வயநாடு வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பது உறுதியானது.

கேரளாவில் மாவோயிஸ்ட்களுக்கும் தண்டர் போல்ட் போலீசாருக்கும் நேற்றைய தினம் நடந்த துப்பாக்கி சண்டை

இதனையடுத்து கோழிக்கோட்டில் சிக்கிய நபர்களுடன் வயநாடு சென்று போலீசார் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போதுதான் மாவோயிஸ்டுகளுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது என விவரிக்கின்றனர் கேரளா போலீசார். கேரளாவின் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உருப்பும்குட்டி வன பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து, கேரள கேரள போலீசின் சிறப்பு படையினர் சம்பவ பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கேரளாவில் மாவோயிஸ்ட்களுக்கும் தண்டர் போல்ட் போலீசாருக்கும் நேற்றைய தினம் நடந்த துப்பாக்கி சண்டை

மாவோயிஸ்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்தனர். எனினும், சம்பவ பகுதியில் இருந்து மாவோயிஸ்டுகள் 8 பேர் தப்பியோடினர். துப்பாக்கி சூட்டை தொடர்ந்து, அந்த பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சூழலில், மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவில் மாவோயிஸ்ட்களுக்கும் தண்டர் போல்ட் போலீசாருக்கும் நேற்றைய தினம் நடந்த துப்பாக்கி சண்டை

கேரளா மாநிலம் கண்ணூர் கறிக்கோட்டக்கர பகுதியில் மாவ்ஸ்டுகளுக்கும் தண்டர்போல்ட் போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு மாவோயிஸ்டுகள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது தற்போது வரை மாவோயிஸ்டுகள் யாரும் பிடிபடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள கேரளா மற்றும் கர்நாடகா எல்லைப் பகுதிகளில் நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு உத்தரவின்படி 50க்கும் மேற்பட்ட நக்சல் தடுப்பு காவல் துறையினர் ஆயுதம் ஏந்தியவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நக்சல்கள் ஊடுருவல் வராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்ட காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

Share This Article
Leave a review