மனுதர்மத்தை நடைமுறைப்படுத்தினால் நாம் மனிதர்களாக வாழ முடியாது – து‌. ரவிக்குமார்

1 Min Read
வாக்கு சேகரிப்பு

 

- Advertisement -
Ad imageAd image

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார் அவர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கெடார் கடைவீதி பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ரவிக்குமார்

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய து.ரவிக்குமார், இந்த தேர்தல் என்பது வெறும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல. நாட்டை காக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை காக்க போராடும் தேர்தல் என்பதாலேயே இது மிக மிக முக்கியமான தேர்தல் ஆகிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்தால் இனி தேர்தல் என்பதே இருக்காது. சாமானிய மக்களிடம் இருக்கும் வாக்குரிமையை பறிக்க பாஜக திட்டமிடுகிறது. அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு மனுதர்மத்தை மீட்டெடுக்க பாஜக பாடுபடுகிறது.

மனுதர்மத்தில் கூறியிருப்பது போல 300 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், பலதரமணம் போன்றவை மறுபடியும் நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக பெண்களுக்கு படிப்புரிமை, சொத்துரிமை, வாக்குரிமை போன்ற அடிப்படை உரிமைகள் எதுவும் இருக்காது. பாஜக இந்தியாவை மீண்டும் பழமைவாதத்தை நோக்கி இழுத்துச் செல்கிறது. பாஜக மனுதர்மத்தை மீட்டெடுக்கும் போது நாம் மனிதர்களாக தான் இருக்க முடியாது, அடிமைகளாக தான் வாழ முடியும்.அதற்கான அத்தனை முன்னேற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பாசிச பாஜகவின் சதியை முறியடிக்கவே 28 கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கி உள்ளோம். எனவே மோடி தூக்கி எறியப்பட நீங்கள் வாக்களிக்க வேண்டும். நம்முடைய ஓட்டு எதிர்காலத்தை காக்க போகிற ஓட்டு. வாக்குரிமையை மீட்க போகிற ஓட்டு. உங்களது வாக்குகளின் மூலம் பாசிச பாஜக மோடி ஆட்சியை அகற்றுவோம் என கூறினார்.

Share This Article
Leave a review