மகனை வெட்டிய தந்தை….
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருணபதி கிராமத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த ஜோடி மற்றும் அவருக்கு ஆதரவு தந்த அவரது சொந்த தாய் உட்பட மூன்று பேரை சரமாரியாக வெட்டி மணமகனின் தந்தை வெறிச்செயல் ! ஆணவக் கொலையா ?என போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருணபதி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர் , சிதம்பரம் பகுதியை சேர்ந்த அனுசியா என்ற பட்டியலின பெண்ணை கடந்த 15 தினங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் இந்த காதல் திருமணத்திற்கு சுபாஷின் தந்தை தண்டபாணி மற்றும் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் சுபாஷின் பாட்டி கண்ணம்மாள் காதல் திருமணத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் திருமண ஜோடிகளுக்கு அவரது வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டுக்கு வந்த சுபாஷின் தந்தை தண்டபாணி தனது மகன் மருமகள் மற்றும் கண்ணம்மாள் ஆகிய மூவரையும் வெட்டியதில் , சம்பவ இடத்திலேயே சுபாஷ் மற்றும் மூதாட்டி கண்ணம்மாள் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருமகள் அனுசியா ஊத்தங்கரை அரசு ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பட்டியலின பெண்ணை திருமணம் செய்த நாள்முதலே தகறாரு நடந்து வந்துள்ளது.கொலைக்கு அதுவே காரணமாயிருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.