ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் உரிமைகளை பாதுகாத்திடவும், ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்திடவும்,டாக்டர் அம்பேத்கர் மன்றம் 1978 ஜனவரி 26-ல் பூவையில், பூவை.M. மூர்த்தியாரால் தொடங்கப்பட்டது.

புரட்சி பாரதம் கட்சி
டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் வரலாறு என்பது முதலில் சென்னையில் உள்ள தலித் மக்களிடையே பகுத்தறிவு உண்டாக்கவும், அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கவும் உருவாக்கபட்ட ஒரு மன்றம்.
தென் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் அடிமைத்தனத்தை அகற்றி சமுதாயம், பொருளாதாரம், அரசியல் துறைகளில் அவர்கள் அதிக இடம் பெறவும், அரசு பதவிகளிலும் இயக்கங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவும்,
பூவை.மூர்த்தியார்
பிராமணர் அல்லாதாரின்சமூக, பொருளாதார, அரசியல் நலன்களைப் பாதுகாப்பதே டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நோக்கமாக இருந்தது. மன்றம் தொடங்கிய சில மாதங்களில் அசுர வளர்ச்சி பெற்று சிரு இயக்கமாக இருந்தாலும்
பல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவுடன் பூவை ஒன்றிய டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றபட்டது. பூவிருந்தவல்லி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்கள் படிப்புக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும், உறுதுனையாய் நின்றது.
அம்பேத்கர் மன்றம்
அதன்பின், பல ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் ஆதரவு பெருகவும், திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆதரவு பெருகவே செங்கை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மன்றம் என்று பெயர் மாற்றப்பட்டது.
சிறு சிறு குழுக்களாக செயல்பட்ட இயக்கம் பிறகு, பல போராட்டங்கள் நடத்தி, பல ஆதிக்க சமூகங்களின் எதிர்புகளை மீரி கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்ற கோட்பாடுகளோடு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைக்ளோடு அனைவருக்கும்

பூவை.ஜெகன்மூர்த்தி
பொதுவாக டாக்டர் அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னனி (APLF – Ambedkar People Liberation Front) ஆக உருவெடுத்தது. பல கட்சியில் மேல் சமூகத்தினரின் ஆதிக்கத்திலும் அவர்களின் தீவிர மனுநீதி கோட்பாடுகளினாலும் பூவை.மூர்த்தியாரால்,
தலித் மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் உரிமைகளுக்கு போராட நமக்கும் அரசியல் உரிமையும் பங்கும் வேண்டும் என புரட்சி பாரதம் கட்சி (PBK) 1998ல் துவங்கப்பட்டது. பூவை.மூர்த்தியார் மறைவுக்கு பிறகு புரட்சிபாரதம் கட்சியின் தலைவராக பூவை.ஜெகன்மூர்த்தி இருந்து வருகிறார்.

விழுப்புரத்தில் மாநாடு
டிசம்பர் மாதம் 20ஆம் தேதி விழுப்புரம் நகராட்சி திடலில் புரட்சி பாரதம் கட்சியின் ”மனிதன் காப்போம்” மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி கே வாசன், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் இதற்கான மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் டாக்டர்.சிலம்பரசன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகின்ற வகையில் மாநாட்டு விழா பந்தல் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.