விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதி மணம்பூண்டி. இந்த பகுதியில் உள்ள ஆசிரியர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (32) ரஞ்சிதா தம்பதியினர். வினோத்குமார் கடந்தாண்டு வேலைக்காக கத்தார் சென்ற நிலையில், தனது குழந்தைகளுடன் ரஞ்சிதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கோடை விடுமுறைக்காக பாண்டிச்சேரிக்கு சென்றுள்ளார் ரஞ்சிதா.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் வினோத்குமார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக வினோத்குமார் மனைவி ரஞ்சிதாவுற்கும் அரகண்டநல்லூர் போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ரஞ்சிதா மற்றும் அவரது தந்தை மகாலிங்கம் ஆகியோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த 8-பவுன் தங்க நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. மேலும், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் வயர்களை அறுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
மேலும், தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் வீட்டில் கைரேகை மற்றும் மோப்பநாய் உதவியுடன் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை மர்மநபர்கள் ஒயர்களை கட் செய்வதற்கு முன்னர் பின்வாசல் வழியாக இரண்டு நபர்கள் வீட்டில் வரும் காட்சிகள் அனைத்தும் பதிவாகி இருந்தது தற்போது இந்த காட்சிகள் வெளியாகி உள்ளது இந்த காட்சிகளின் அடிப்படையில் மறுமணவர்கள் இருவர் யார் என்பது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.