அரியலூர் – கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நபரை 2வது நாளாக தேடும் பணி தீவிரம் – மேலும் ஒரு நபர் கொள்ளிடம் ஆற்றின் சூழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு
அரியலூர் மாவட்டம் பெரியமறை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொள்ளிடம் ஆற்றின் திட்டில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை ஓட்டச் சென்றபோது கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். நேற்று கொள்ளிடம் ஆற்றின் தண்ணீரில் அடுத்து செல்லப்பட்ட முருகானந்தத்தை கண்டுபிடிக்க முடியாததை அடுத்து இன்று 2வது நாளாக அரியலூர் தீயணைப்புத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்
இந்நிலையில் முருகானந்தத்தின் உறவினரான தஞ்சை மாவட்டம் மடம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் முருகானந்தத்தை தேடுவதற்காக கொள்ளிடம் ஆற்றில் இறங்கிய போது அவரும் சுழலில் சிக்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் பரபரப்பு இரண்டு பேரையும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.