டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பெண்மீது துப்பாக்கி சூடு

1 Min Read
ராதா (40)

டெல்லி சாகெத் பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று விசாரணைக்கு வந்த பெண் மீது ஒரு நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

- Advertisement -
Ad imageAd image

பலத்த காயமடைந்த பெண் ராதா (40) என்று அடையாளம் காணப்பட்டு உள்ளார்.துப்பாக்கி குண்டுக்காயம் அடைந்த அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தகராறு தொடர்பான வழக்கு தொடர்பாக அந்த பெண் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த மர்ம நபர், அந்த பெண்ணின் மீது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவர் தொழில் முறையில் ஒரு வழக்குரைஞர் என்றும் ஆனால், தற்போது அவர் பார் கவுன்சிலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. நிதி முறைகேடு தொடர்பாக அந்த பெண் மற்றும் ஒரு வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்திய அந்த நபர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சாகெத் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதிக வட்டி தருவதாகக் கூறி அந்த பெண், அவரிடமிருந்து ரூ.25 லட்சம் கடன் வாங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

வழக்குரைஞர் உடையில் வந்த அந்த நபர், வெள்ளிக்கிழமை காலை சாகெத் நீதிமன்றம் வந்தார். அப்போது அந்த பெண், தனது வழக்குரைஞருடன் வழக்கு பற்றி பேசிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் அந்த பெண்ணை நோக்கி சுட்டார். பின்னர் உணவு விடுதியின் சமையலறை வாயில் வழியாக தப்பிச் சென்றார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தேசியத் தலைநகரான தில்லியில், நீதிமன்ற வளாகத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது .

Share This Article
Leave a review